கிருஷ்ணகிரியில் ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்த்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை, ஒருவர் உடல் மாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அருகே இருக்கக்கூடிய மேட்டுத் தெருவில் வசித்து வந்தவர்கள் சுரேஷ், அம்மு தம்பதியர். இரண்டு பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக அம்மு மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அம்மு தனது மூத்த மூன்று குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின், தனது கடைசி இரண்டு குழந்தைகளான சுபிக்க்ஷா 7, பீஷ்மர் 5, ஆகியோரோடு காலை கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த ரயில்வே காவல் துறையினர் மற்றும் கல்லாவி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அசுர வேகத்தில் சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்ட காவல் அதிகாரி படுகாயம்
அப்போது தற்கொலை செய்துகொண்ட பீஷ்மர் மற்றும் தாய் அம்மு ஆகியோர் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் மகள் சுபிக்ஷாவின் உடல் கிடைக்காததால் தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த பெண் குழந்தையின் உடல் உறவினர்களால் எடுத்து செல்லப்பட்டதாக கூறியதை அடுத்து கல்லாவி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு எடுத்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் இருப்புபாதைக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டது.
வேலையை வாங்கிவிட்டு சம்பளம் தராமல் விரட்டியடிக்கின்றனர்; வடமாநில தொழிலாளர்கள் பரபரப்பு புகார்
குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.