Asianet News TamilAsianet News Tamil

பாஜக வேட்பாளரை 75 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் - செல்வகணபதி பேச்சு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை 75 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் செல்வகணபதி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

2024 parliament election bjp candidate will win with more than 75 percentage votes says puducherry bjp president selvaganapathy vel
Author
First Published Sep 29, 2023, 10:07 AM IST

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி எம்.பி.,யை கடந்த 25ஆம் தேதி பாஜக மேலிடம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில பாஜக தலைவராக செல்வ கணபதி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு விழாவில் புதுச்சேரி மாநில பாஜக தலைவராக இருந்த முன்னாள் தலைவர் சாமிநாதன் பாஜக கொடியை புதிய தலைவராக பதவியேற்ற செல்வ கணபதிக்கு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவரும் புதிய தலைவரை வாழ்த்தி பேசினார்கள். இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய பாஜக தலைவர் செல்வகணபதி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை ஆறு மாதங்களில்  சந்திக்க உள்ளோம். எனவே தொண்டர்கள் தேர்தலை கருத்தில் கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும்.

அதிமுக, பாஜக பிரிஞ்சிட்டாங்க; இனி புதுச்சேரில நாம தான் - தொண்டர்கள் மத்தியில் நாராயணசாமி பேச்சு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வருகின்ற 2024 தேர்தலில் 375 எம்பி களுக்கும் மேல் பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் தான் போட்டியிடப் போகிறார். அவரை  75% வாக்குகள் பெற்று வெற்றி பெற வைக்கவேண்டும். அதற்காக அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரியில் பண மாலையுடன் பதவி ஏற்று கொண்ட பாஜக தலைவர் செல்வகணபதி

பதிவேற்பு விழாவில் புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் சுரானா, குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய். ஜெ. சரவணன் குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம் ஜான் குமார், ராமலிங்கம், ரிச்சர்ட் ஜான் குமார், வெங்கடேசன்,  சிவசங்கரன், அசோக் பாபு மற்றும் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைத்து பிரிவு அணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios