Asianet News TamilAsianet News Tamil

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் மசோதா கண்துடைப்பு - திருச்சியில் கனிமொழி பேட்டி

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் மசோதா வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்று எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.

women reservation bill is a drama of bjp government says mp kanimozhi vel
Author
First Published Oct 7, 2023, 7:22 PM IST

திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணியின் மாநில நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் மதிப்பீட்டு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்புச் செய்ய வேண்டும். அதன் பிறகு தான் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிர்ணயிக்கப்படும். அதுதான் மசோதாவில் சொல்லப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு எப்போது தொடங்கி, எப்போது முடியும் என தெரியவில்லை. அது 10, 20, 30 ஆண்டுகள் ஆகலாம் அதற்கான கால நிர்ணயம் குறிப்பிடவில்லை.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரம்; வெளிநாட்டில் குவிக்கப்பட்ட ரூ.500 கோடி

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த தேர்தலில் மசோதா வர வாய்ப்பு இல்லை. எந்த தேர்தலில் வரும் எனவும் தெரியவில்லை இதுதான் உண்மை இது வெறும் கண்துடைப்பு. தலைவர்களை கொச்சைப்படுத்துவது தொடர்ந்து அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்துக்குள்ளேயே கொச்சையாக பேசியவர்கள்  மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மீது என்னென்ன  அச்சுறுத்தல்களை காட்ட முடியுமா அதெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அரசுக்கு வருமானம் தான் முக்கியம் என்றால் விபசாரம் நடத்தலாம்; கலாசார சீரழிவால் அன்பழகன் ஆவேசம்

அதிமுக பாஜக பிரிவிற்கு நான் கருத்து சொல்ல முடியாது. அது அவர்கள் சுயமரியாதைக்கு உட்பட்டது. கட்சியில் மகளிர்க்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மகளிர்க்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்திற்கு மாற்று கருத்து இல்லை. பாராளுமன்றத்தில் காவிரியை குறித்து அதிகம் பேசவில்லை என்று கூறப்படுகிறது என்று கேள்விக்கு, பாராளுமன்றமே மூன்று நாள் தான் நடைபெற்றது பாராளுமன்றத்தில் பேசுவதற்கு எந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios