Asianet News TamilAsianet News Tamil

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரம்; வெளிநாட்டில் குவிக்கப்பட்ட ரூ.500 கோடி

ஆருத்ரா நிதி நிறுவன மோடி வழக்கில் ரூ.500 கோடி வரை துபாயில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

aarudhra scam issue rs 500 crore hoarded in dubai vel
Author
First Published Oct 7, 2023, 6:40 PM IST

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா நிதி நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால் மாதம் தோறும் 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தது. இதனை நம்பி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்கள் ரூ.2438 கோடி வரை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்து வருகின்றனர்.

அரசுக்கு வருமானம் தான் முக்கியம் என்றால் விபசாரம் நடத்தலாம்; கலாசார சீரழிவால் அன்பழகன் ஆவேசம்

நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதால் ரெட் கார்னர் நோட்டீஸ் வழக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வழக்கிக் கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது. 22 கார்கள், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ராஜசேகர், மனைவி உஷாவை கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா உட்பட 4 நிறுவனங்களின் வழக்குகள் பற்றிய விவரங்கள் அமலாக்கத்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலி

இந்நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் ரூ.500 கோடி வரை துபாயில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் துபாயில் பதுங்கி உள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். சொத்துகளை மீட்க துபாய் அரசுடன் எம்.லாட் எனும் பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டு அதனை உடனடியாக அமல்படுத்த மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios