இந்த ஆட்சியில பெண்கள் நடமாட முடியல... திமுகவை சாடிய எடப்பாடி பழனிசாமி!!

திமுக ஆட்சியில் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். 

women could not walk outside in dmk rule says edapadi palanisamy

திமுக ஆட்சியில் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். மகளிர் தினத்தையொட்டி சென்னை ராயப்பேட்டையில் அதிமுகவின் மகளிர் அணி சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டு, கேக் வெட்டி மகளிர் அணி செயலாளர் வளர்மதிக்கு உட்பட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு வழங்கினார். பின்னர் சமாதான புறாக்களை பறக்கவிட்ட எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: சும்மா காமெடி பண்ணாதீங்க! ஜெயலலிதாவை எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிடுவதா? சிரிப்புதான் வருது! டிடிவி.தினகரன்.!

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு பெண் முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டு மக்கள் அவருடைய ஆட்சி காலத்தில் நிறைய நன்மைகளை பெற்றார்கள். இந்திய நாட்டுக்கு வழிகாட்டியாக இருந்தவர். முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும், ஆள வேண்டும், திறமையோடு வழிநடத்தி சென்றவர் ஜெயலலிதா. நம்மை ஈன்ற தாய்க்கும், நம்மை காக்கும் பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பல்வேறு மகளிர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இதையும் படிங்க: மகளிரணி நிர்வாகிகளுடன் பிரமாண்ட கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி

தொட்டில் குழந்தைகள் திட்டம், விலையில்லா சானிட்டரி நாப்கின், மானிய ஸ்கெட்டர் என பல நிறைவேற்றினார். ஆனால் இதையெல்லாம் தற்போது உள்ள அரசு நிறுத்திவிட்டது. பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் வாழ்வில் சந்திக்கும் தடைகற்களை படிகற்களாக்கி வாழ்வில் முன்னேற வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா கருத்துகளை மனதில் வைத்து வாழ்வில் முன்னேறி காட்ட வேண்டும், பெண்களை வணங்குவோம், பெண்களை போற்றுவோம், பெண்களால் பெருமைகொள்வோம். அதிமுக ஆட்சி காலத்தில் மகளிருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios