கைது செய்யப்பட்ட நபரை முதல்வர் நேரில் சென்று பார்ப்பதா? நாடகமாடும் செந்தில் பாலாஜி! இறங்கி அடிக்கும் அண்ணாமலை!

 நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே வருமானவரி, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அமலாக்கத்துறையிடம் ஆதாரங்கள் உள்ளதால் தான்  அமைச்சர் அறையில் சோதனை நடத்தப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Will the CM Stalin personally visit the arrested person? Annamalai condemned

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து எந்த இடத்திலும் கடுகளவு கூட மோசமாக பேசியதே இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்தார் செந்தில் பாலாஜி. பணம் கொடுத்ததால் பாதிக்கப்பட்ட அருள்மணி என்பவர் 2018ம் ஆண்டு செந்தில் பாலாஜி மீது புகார் அளித்தார். இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் செந்தில் பாலாஜி. 

இதையும் படிங்க;- செந்தில் பாலாஜி தான் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் நாடகம் நடத்துகிறார்.! இறங்கி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி

Will the CM Stalin personally visit the arrested person? Annamalai condemned

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. எந்த விதத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று முதலமைச்சர் விளக்குவாரா? நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே வருமானவரி, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அமலாக்கத்துறையிடம் ஆதாரங்கள் உள்ளதால் தான்  அமைச்சர் அறையில் சோதனை நடத்தப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநில வழக்குகளில் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு வித்தியாசமானது. அமலாக்கத்துறை மத்திய அரசின் கீழ் வந்தாலும், அது தனது கடமையை சுதந்திரமாக செய்து வருகிறது. 

இதையும் படிங்க;-  அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.. அமலாக்கத்துறை பிளானுக்கு தடை போட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

Will the CM Stalin personally visit the arrested person? Annamalai condemned

யாரையும் பழிவாங்கும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை. செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை பாயும் என்பது முன் கூட்டியே தெரிந்தது தான். மொரிசீயஸ் உட்பட வெளிநாடுகளுக்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நபரை முதல்வர் நேரில் சென்று பார்த்தது கண்டிக்கத்தக்கது. விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் அமைச்சர் செந்தில் பாலாஜி நாடகம் ஆடுகிறார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை முதல்வரும், அமைச்சர்களும் உணர வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு நிற்காது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios