அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.. அமலாக்கத்துறை பிளானுக்கு தடை போட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

தமிழக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

Minister Senthil Balaji wife appeals in chennai High Court

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் குடும்பத்தினர் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. 

தமிழக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையானது இன்று அதிகாலை 2 மணிவரை நீடித்தது. சுமார் 18 மணிநேரம் சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாகனத்தில் மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன்  வீட்டில் இருந்து வெளியே அழைத்து செல்ல முயன்றனர். 

இதையும் படிங்க;- நெங்சுவலி வந்தால் காவலரை எப்படி எட்டி உதைக்க முடியும்! செந்தில் பாலாஜியை கைது செய்தது சரியே.. ஜெயக்குமார்..!

Minister Senthil Balaji wife appeals in chennai High Court

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை முடிந்துள்ளது. ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு சரிசெய்யப்பட்டது.

இதையும் படிங்க;- அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி உள்ளது? ஓமந்தூரார் மருத்துவமனை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Minister Senthil Balaji wife appeals in chennai High Court

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அடங்கிய அமர்வில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அமலாக்கத்துறை எந்த தகவலும் அளிக்காமல் சட்டவிரோதமாக செந்தில் பாலாஜியை  கைது செய்துள்ளதாகவும், கைது தொடர்பாக குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. சட்ட விதிகளை முறையாக பின்பற்றவில்லை. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துகொள்வதாக தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க;-  அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios