இபிஎஸ்க்கு மட்டும் டெல்லியில் இருந்து அழைப்பிதழ் வந்தது ஏன்..? ஓபிஎஸ் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை பதில்..?
ஜி20 மாநாட்டின் ஆலோசனைகூட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு வந்தது குறித்த கேள்விக்கு எல்லாம் நன்மைக்கே என ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்துள்ளார்.
அதிமுகவில் அதிகார மோதல்
அதிமுகவி்ல் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுக யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உயர்நீதிமன்றத்தை தாண்டி தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே ஜி.20 மாநாட்டின் ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இபிஎஸ்க்கு அழைப்பிதழ் அனுப்பிய மத்திய அரசு
அதில் தமிழகத்தில் இருந்து திமுக தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமிக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஓபிஎஸ் அணி அதிருப்தி அடைந்த நிலையில் அரசு அதிகாரிகள் தவறாக இபிஎஸ்க்கு அழைப்பிதழ் அனுப்பியிருப்பார்கள். இந்த அழைப்பிதழ் தொடர்பாக மத்திய அரசிடம் முறையிட்டு இருப்பதாக ஓபிஎஸ் அணியினர் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் இது தொடர்பான கேள்விக்கு ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார். சென்னையில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையம் வருகை தந்தார். அவரை அதிமுகவினர் ஏராளமானோர் உற்சாகத்தோடு வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.
அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. வெளியான அதிர்ச்சி காரணம்?
ஓபிஎஸ் அளித்த ஒற்றை வார்த்தை பதில்
ஜெயலலிதா நினைவு நாளில் அம்மா மறைந்திட்ட இந்நன்னாளில் என எடப்பாடி அணியினர் உறுதிமொழி எடுத்தது குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அவர் டங்க் ஸ்லிப். வாய்தவறி தவறுதலாக கூறிவிட்டனர் என தெரிவித்தார். டெல்லியில் இருந்து இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடிக்கு கடிதம் வந்தது குறித்த கேள்விக்கு, எல்லாம் நன்மைக்கே என குறிப்பிட்டார். பொதுக்கூட்டம் எப்போது நடைபெறும் குறித்த கேள்விக்கு, விரைவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கூறினார்.
இதையும் படியுங்கள்