தேசிய தலைவர் அம்பேத்கரை ஒரு சாதிக்குள் அடைத்து சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கும் திருமா! வெளுத்து வாங்கும் பாஜக

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அண்ணல் அம்பேத்கர் சிலைகளை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தை சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள். 

Thirumavalavan is belittling the national leader Ambedkar by locking him in a caste... narayanan thirupathy

அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்த செல்லும் பாஜகவினர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடும் செயலில் விசிகவினர் இறங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அண்ணல் அம்பேத்கர் சிலைகளை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தை சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பன்முகம் கொண்ட ஒரு தேசிய தலைவர். அவரை ஒரு சாதிக்குள் அடைத்து அவரை சிறுமைப்படுத்தி கொண்டிருக்கிறார் தொல்.திருமாவளவன்.

இதையும் படிங்க;- வெட்க கெட்ட காங்கிரஸ்.. பாஜக - அதிமுக கூட்டணி குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை! போட்டு தாக்கும் பாஜக.!

Thirumavalavan is belittling the national leader Ambedkar by locking him in a caste... narayanan thirupathy

தொடர்ந்து கடந்த இரு வருடங்களாக, அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்த செல்லும் பாஜகவினர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடும் செயலில் விசிகவினர் இறங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எதிர்காலத்தில் காவல்துறைக்கே சிக்கலை வரவழைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தை தங்களின் சொந்த இடம் போல் கருதிகொண்டு அங்கே யார் செல்ல வேண்டும், யார் செல்லக்கூடாது என்று முடிவு செய்வது தாங்கள்தான் என்ற தோரணையில் விசிகவினரை அனுமதிப்பது முறையல்ல.

Thirumavalavan is belittling the national leader Ambedkar by locking him in a caste... narayanan thirupathy

இன்று (டிச.6) அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு செல்ல அனுமதி கேட்டு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்ற பின்னர் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே விசிகவைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள் மற்றும் கட்சியினர் அவரை தாக்க முற்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீதிமன்ற வளாகத்திலேயே அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை எனும் நிலை தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொண்டிருக்கிறது என்பதையே எடுத்துகாட்டுகிறது.

Thirumavalavan is belittling the national leader Ambedkar by locking him in a caste... narayanan thirupathy

அதேபோல் தூத்துக்குடி உட்பட பல்வேறு இடங்களில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற பாஜகவினர் மீது விசிகவினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதும், அதை கண்டும் காணாமல் காவல்துறையினர் வேடிக்கைப் பார்ப்பதும் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சும் திமுக அரசின் போக்கையே உணர்த்துகிறது. அடக்குமுறையை கொண்டோ, ரவுடித்தனத்தைக் கொண்டோ பாஜகவை அடக்கிவிடலாம் என்று யாரேனும் நினைத்தால் பாஜக அடங்க மறுத்து அடக்கி ஆளும் அத்துமீறலை முறியடிக்கும் என நாராயணன் திருப்பதி  கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  தவறான சிகிச்சை சிறுமி உயிரிழந்த விவகாரம்! இப்போ ரத்தம் கொதிக்கவில்லையா? ஸ்டாலினிடம் நாராயணன் திருப்பதி கேள்வி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios