தவறான சிகிச்சை சிறுமி உயிரிழந்த விவகாரம்! இப்போ ரத்தம் கொதிக்கவில்லையா? ஸ்டாலினிடம் நாராயணன் திருப்பதி கேள்வி!
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தார். இதனை சுட்டிக்காட்டி தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ஸ்டாலினை கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தார். இதனை சுட்டிக்காட்டி தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ஸ்டாலினை கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், ரத்தம் கொதிக்கிறது. இந்த ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன? என்று டிசம்பர் 26,2018 அன்று சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தவறுதலாக ஹெச்ஐவி ரத்தம் செலுத்திய விவாகரத்தில் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க: கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு காரணமான திமுக அரசை கண்டிக்கிறேன்... ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்!!
நேற்று, இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியா என்ற 17 வயது சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் அந்த சிறுமியின் உயிர் பிரிந்து விட்டது. இப்போது ரத்தம் கொதிக்கவில்லையா ஸ்டாலின் அவர்களே?
இதையும் படிங்க: குற்றவாளிகளை கொண்டாட கூடாது.. எழுவர் விடுதலை குறித்து பாஜகவை சீண்டிய எம்.பி ஜோதிமணி
இது ஊழல் அரசு என்பதையும், உங்கள் ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனை எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதை விட உதாரணம் வேண்டியதில்லை என்பதையும் ஒப்பு கொள்கிறீர்களா முதல்வர் அவர்களே? சொன்னது நீ தானா சொல் சொல் சொல் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.