Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. வெளியான அதிர்ச்சி காரணம்?

திமுகவின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இவரது மகள் பாரதி(55). 

Minister Duraimurugan nephew committed suicide by jumping in front of a train
Author
First Published Dec 7, 2022, 6:41 AM IST

திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமுகவின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இவரது மகள் பாரதி(55). கணவர் ராஜ்குமார். இவர்களுக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகளுடன் காட்டிபாடியில் வசித்து வந்தார். பாரதியின் கணவர் ராஜ்குமார் காட்பாடி பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க;- பிரியாவை போன்று மற்றொரு சம்பவம்.. கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8வது நாளில் இளம்பெண் உயிரிழப்பு.!

Minister Duraimurugan nephew committed suicide by jumping in front of a train

இந்நிலையில், காட்பாடி அருகே லத்தேரியில் ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உயிரிழந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது துரைமுருகனின் அண்ணன் மகள் பாரதி என்பது தெரியவந்தது. 

Minister Duraimurugan nephew committed suicide by jumping in front of a train

இதையடுத்து தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  வீடியோ பதிவு செய்த படி 114 கி.மீ வேகத்தில் பைக்கில் சென்ற போது விபத்து.. படுகாயமடைந்த இளைஞர்கள் உயிரிழப்பு.!

Follow Us:
Download App:
  • android
  • ios