வீடியோ பதிவு செய்த படி 114 கி.மீ வேகத்தில் பைக்கில் சென்ற போது விபத்து.. படுகாயமடைந்த இளைஞர்கள் உயிரிழப்பு.!
சென்னை தரமணி தந்தை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(19). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் ஹரி(17). வேளச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
சென்னை தரமணியில் 114 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை தரமணி தந்தை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(19). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் ஹரி(17). வேளச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், பிரவீனும், ஹரியும் விலை உயர்ந்த பைக்கில் 114 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தார். இதை பின்னால் அமர்ந்திருந்த ஹரிஹரன் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
இதையும் படிங்க;- ஐயோ சாமி.. கல்யாணம் பண்ண ஏழு நாள்ல என்னை விட்டு போயிட்டியே.. நெஞ்சில் அடித்து கதறிய மனைவி..!
அப்போது, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் இருந்து வந்த லோடு வேன் ஒன்று திரும்பியது. வேன் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் சறுக்கியபடி பல அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டதால் இருவரும் படுகாயமடைந்தனர்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர்களை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், லோடு வேன் ஒட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் பைக்கை அதிவேகத்தில் இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- சினிமாவை மிஞ்சிய பயங்கரம்! விபத்தில் தூக்கி வீசப்பட்ட தாய்! மகனை மார்போடு அனைத்து காப்பாற்றி உயிரை விட்ட தாய்