ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..! வெல்லப்போவது யார்.? தயார் நிலையில் வாக்கும் எண்ணும் பணி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த தொகுதியில் வெற்றிபெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளை மட்டுமில்லாமல், பொதுமக்களிடமும் கேள்வி எழுந்துள்ளது. இதன்கான பதில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போது தெரியவரும்.
திருவிழா போல் காட்சி அளித்த ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மார்டைப்பால் காலமானார். இதனையடுத்து இந்த தொகுதிக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக சார்பாக ஆனந்த் உள்ளிட்ட 77 பேர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரஸ்- அதிமுக இடையே உச்சகட்ட போட்டி ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பும் தங்களது செல்வாக்கை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக 100க்கும் மேற்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக- திமுக நியமித்தது.
வாக்கு எண்ணும் பணி தீவிரம்
இதனையடுத்து கடந்த ஒருமாதமாக ஈரோடு கிழக்கு தொகுதி திரும்பிய பக்கமெல்லாம் திருவிழா போல் காட்சி அளித்தது. அந்த தொகுதி வாக்காளர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்களால் திக்குமுக்காடி போனார்கள். இதனையடுத்து கடந்த 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 82 ஆயிரத்து 138 ஆண்கள், 88 ஆயிரத்து 37 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 17 போ் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 போ் வாக்களித்திருந்தனா். மொத்தமாக 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. ஈரோடு சித்தோடு ஐஆர்டிடி பொறியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதனையடுத்து 16 மேஜைகளில் மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் அரசியல் கட்சிகளுக்குள் மோதல் ஏற்படாமல் தடுக்க வாக்குகள் எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகரிப்பு
வாக்கு எண்ணும் மையமான ஈரோடு சித்தோடு ஐஆர்டிடி பொறியல் கல்லூரிக்கு வாக்கு எண்ணும் அதிகாரிகள், அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், மற்றும் பத்திரிக்கையாளர்கள் வந்துகொண்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இருந்தால் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்