2024 தேர்தலில் இவர்கள் மட்டும் ஜெயிக்கக்கூடாது.. “மகாபாரதம்” மூலம் பாஜகவை தாக்கிய முதல்வர் மு.க ஸ்டாலின்.!
இது எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட மேடை அல்ல. இந்திய அரசியலுக்கான புதிய தொடக்க விழா என்று பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று பிரமாண்ட பிறந்தநாள் விழா நடைபெற்றது.
தேசிய தலைவர்கள் பங்கேற்றுள்ள தனது பிறந்தநாள் விழாவில் பிறகு உரையாற்றினார் முதல்வர் மு.க ஸ்டாலின். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் என்பது நான் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அந்த பெயருக்குள் அடக்கம். மு.க.ஸ்டாலின் எனும் நான் வீட்டிற்கு விளக்காக இருப்பேன், நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன், மக்களுக்காக கவலைப்படக்கூடிய தலைவனாக இருப்பேன்.
அண்ணா போல பேச தெரியாது. கலைஞர் போல பேச தெரியாது. ஆனால் அவர்களை போல உழைக்க தெரியும். பொது வாழ்க்கை இப்படித்தான் இருக்குமென, வசந்த மாளிகைக்கு அனுப்பி வைப்பது போல சிறைக்கு அனுப்பி வைத்தார் கலைஞர். 70 வயது ஆகிவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. மக்களுக்காக போராடும் நமக்கு கால நேரம் கிடையாது. லட்சியவாதிகளுக்கு என்றும் வயதாவதில்லை.
இது எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட மேடை அல்ல. இந்திய அரசியலுக்கான புதிய தொடக்க விழா. மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதால் தடை செய்ய மறுக்கிறார்களா ? என்று கேள்வி எழுப்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எதையெல்லாம் சாதிக்க முடியாது என்று கூறினார்களோ, அதையெல்லாம் சாதிக்க முடியும் என்று கூறியவர் அண்ணா.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
மக்களின் கவலைகளை தீர்க்கும் தலைவனாக இருப்பேன் என உறுதி பூண்டுள்ளேன். எனக்கு 70 வயது என்று சொல்லும் போது சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். என் வயதை கூகுளில் பார்த்த பிறகே ராகுல் காந்தி நம்பினார். 70 வயது ஆகிவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. மக்களுக்காக போராடும் நமக்கு கால நேரம் கிடையாது. எல்லாம் நேற்று நடந்தது போல் தோன்றும்.
ஆனால் என்னுடைய பயணம் நெடிய பயணம். திமுகவை நிரந்தரமாக ஆட்சிப் பொறுப்பில் வைத்திருப்பேன். நான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. கொள்கையை பரப்ப கட்சி, கொள்கையை நிறைவேற்ற ஆட்சி, இந்த இரண்டின் வழியாக தமிழ்நாட்டை தலைநிமிர வைப்போம். தேர்தல் அறிக்கையில் வழங்கிய 505 வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றியுள்ளோம்.
எஞ்சிய வாக்குறுதிகள் ஓராண்டில் நிறைவேற்றப்படும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதே முக்கியம். பாஜகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் நிற்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும் என்று பேசினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
இதையும் படிங்க..TN Rain Alert : மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு விபரம்