Asianet News TamilAsianet News Tamil

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது? முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்..!

தேர்தல் வாக்குறுதியான மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போதும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். 

When will Rs.1000 per month be given to heads of households? CM Stalin Good News..!
Author
First Published Sep 1, 2022, 12:28 PM IST

தேர்தல் வாக்குறுதியான மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போதும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். 

திமுக தேர்தல் அறிக்கையில் மாதம் தோறும் ரூ.1000 குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் இன்னும் அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுக அரசு பொய் வாக்குறுதியைக் கொடுத்து ஆட்சிக்கு வந்து மக்களை வஞ்சிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க;- தமிழகத்தின் சாபக்கேடு.. நீங்கள் என் செருப்புக்கூட நிகரில்லை.. பிடிஆரை வச்சு செய்த அண்ணாமலை..!

When will Rs.1000 per month be given to heads of households? CM Stalin Good News..!

இந்நிலையில், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது, பேசிய முதல்வர்;- தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பொய்யான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். திமுக ஆட்சி அரசியல் ஆட்சி கிடையாது. இபிஎஸ் தொகுதியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினையை நாங்கள் தீர்த்து வைக்கிறோம். 70% வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம், எஞ்சிய 30% வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம். 

When will Rs.1000 per month be given to heads of households? CM Stalin Good News..!

மக்கள் என்னிடம் மனு கொடுத்துவிட்டு நன்றி என்று சொல்கின்றனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே அவர்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்துள்ளோம். நிதிநிலை சரியானதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும். உரிமைத் தொகை என்ற வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  8 வழிச்சாலையில் நாடகம்.? மக்களிடம் பகிரங்கமாக சொல்லுங்க... ஸ்டாலினை ரவுண்டு கட்டும் அண்ணாமலை.

Follow Us:
Download App:
  • android
  • ios