தமிழகத்தின் சாபக்கேடு.. நீங்கள் என் செருப்புக்கு கூட நிகரில்லை.. பிடிஆரை வச்சு செய்த அண்ணாமலை..!
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு வீரமரணமடைந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை வீசினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து அமைச்சர் கார் மீது பாஜகவினர் காலணி வீசியது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: காசுக்காக இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் தான் ஜெயக்குமார்.. எடப்பாடி மாடு மேய்த்தவர்.. பெங்களூர் புகழேந்தி.
இந்த விவகாரம் தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் செருப்புகளின் அளவுக்கு கூட உங்களுக்கு தகுதியில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், பிடிஆர், உங்கள் பிரச்சனை இதுதான். முன்னோர்களின் இனிஷிலுடன் வாழும் உங்களாலும் உங்கள் கூட்டாளிகளாலும் சுயமாக உருவான விவசாயியின் மகனை ஒரு நபராக ஏற்க முடியாது.
இதையும் படிங்க: எளியோரின் பசியாற்றும் ஈரோடு தம்பதியினர்… இதயத்தை நனைத்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் டிவீட்!!
பெரிய பரம்பரையிலும் வெள்ளிக் கரண்டியிலும் பிறந்ததை தவிர்த்து இந்த ஜென்மத்தில் நீங்கள் பயனுள்ள எதையாவது செய்து இருக்கிறீர்களா? அரசியலுக்கும் நமது மாநிலத்துக்கும் நீங்கள் சாபக்கேடாக உள்ளீர்கள். பெரிய விமானங்களில் செல்லாத, வங்கிகளை இழுத்து மூடாத, முக்கியமாக சமநிலைகொண்ட அறிவை கொண்டு வாழும் எங்களைபோன்ற மக்கள் உள்ளார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இறுதியாக ஒன்றை சொல்கிறேன். என் செருப்புகளின் அளவுக்கு கூட உங்களுக்கு தகுதியில்லை. உங்கள் அளவுக்கு தரக்குறைவாக நான் இறங்க மாட்டேன். எனவே கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.