Asianet News TamilAsianet News Tamil

சுவாசிக்கும் காற்றை நிறுத்திவிட்டு மிச்சபடுத்தி விட்டேன் என கூறுவதா.? பிடிஆரை வெளுத்து வாங்கும் RB உதயகுமார்

மனிதன் சுவாசிக்கும் மூச்சுக்காற்றை நிறுத்திவிட்டு காற்றை மிச்சபடுத்திவிட்டேன் என்று கூறுவது போல் மக்களின் சமூக பாதுகாப்புத் திட்டங்களை நிறுத்திவிட்டு வருவாய் பற்றாக்குறை இரு மடங்காக குறைத்ததாக தமிழக நிதி அமைச்சர் கூறுவதா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
 

What are the social welfare programs implemented by the DMK regime RB Udayakumar question
Author
First Published Sep 23, 2022, 10:51 AM IST

திமுக செயல்படுத்திய திட்டம் என்ன..?

தமிழக நிதி நிலை தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிய கருத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதாரம் படித்தவருக்கு மக்கள் வாழ்க்கை பற்றி தெரியுமா, ஒரு மனிதனுக்கு தேவை உணவு, உடை, இருப்பிடமாகும். கடந்த 15   மாதகாலத்தில் நிதி அமைச்சர் எத்தனை புதிய திட்டங்கள், மக்களுக்கு வாழ்வாதார திட்டங்கள், மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்கள், கல்வி திட்டங்கள், வேலை வாய்ப்பு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் என்பதை பட்டியலிட்டு சொன்னால் சாலப்பொருத்தமாக இருக்கும். புரட்சித்தலைவி அம்மா தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி 8 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் தோறும் அரிசிதிட்டத்தை தந்தார்கள், அத்திட்டத்தினை எடப்பாடியார் ஆட்சியில் கடைசி வரை கொண்டு சென்றார், தாலிக்கு தங்கம் திட்டத்தை எடப்பாடியார் ஆட்சி காலத்தில் கடைசி வரை வழங்கப்பட்டது,  

What are the social welfare programs implemented by the DMK regime RB Udayakumar question

மெத்த படித்தவருக்கு சமூக திட்டங்கள் தெரியவில்லை

37 லட்சம் முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு உதவித்தொகை 1000 ரூபாய் வழங்கப்பட்டது, கடந்த திமுக ஆட்சியில் 1200 கோடி ஒதுக்கப்பட்டது, ஆனால் அதிமுக ஆட்சியில் 3000 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டது எடப்பாடியார் கூடுதலாக 5 லட்சம் நபர்களுக்கு ஒதுக்கீடு செய்தார்,  இன்றைக்கு மக்கள் மனு கொடுக்கிறார்கள் அந்த மனுக்களுக்கு என்ன தீர்வு ஏற்பட்டுள்ளது ,எடப்பாடியார் கொண்டுவந்த திட்டங்களை தான், இன்றைக்கு முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார்,  வருவாய் பற்றாக்குறை குறித்து அமைச்சர் விளக்கம் கொடுத்திருப்பது தெளிவாக தெரிகிறது சர்வாதிகார போக்கு என்று, சொத்து வரி, மின்சார வரி, சாக்கடை வரியை உயர்த்தி விட்டு சர்வாதிகார போக்குடன் பதில் கூறுவதா? மெத்தப் படித்தவருக்கு மக்களின் சமூக திட்டங்கள் குறித்து தெரியவில்லை, இன்றைக்கு ஒருபுறம் அனைத்து வசதிகளில் உள்ள உயர்ந்த மக்கள் உள்ளனர், மறுபுறம் அடிப்படை வசதி இல்லாமல் ஏழைஎளிய மக்கள் வசித்து வருகின்றனர் அவர்களை கரைசேர்க்க கடமையாற்ற நிதி கையாளப்படுகிறதா?

பூஜையில் வைக்கப்பட்ட செங்கல்லை காலால் எட்டி உதைத்த திமுக MP செந்தில் குமார்: ரத்தம்கொதிக்கும் ராம ரவிக்குமார்

What are the social welfare programs implemented by the DMK regime RB Udayakumar question

திமுக வாக்குறுதி என்ன ஆனது..?

 தமிழக நிதிநிலை வீட்டுக்கு கணக்கு அல்ல, செலவுகளை குறைக்க மக்களின் அடிப்படை தேவைகளை செய்து தருவது தார்மீக கடமையாகும் அதை கேட்க எதிர்க்கட்சிக்கு தார்மீக உரிமை உண்டு. திட்டத்தை புரட்சிதலைவர் தொடங்கி வைக்கும் போது அதுக்கு பொருளாதாரத்தை காரணம் காட்டினர், ஆனால் பிச்சை எடுத்தாவது திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று புரட்சிதலைவர் கூறினார், தற்போது அந்த திட்டத்தால் கல்வி சதவீதங்கள் உயர்ந்தன,கடந்த தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் 525 தேர்தல் அறிக்கை விட்டார், அதில் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், கேஸ் மானியம் 100 ரூபாய், பெட்ரோல் டீசல் விலை குறைப்போம் என்று கூறினார் ஆனால் இதுவரை எதுவும் செய்யவில்லை, ஆனால் நிதி அமைச்சர் சமூக பாதுகாப்புத் திட்டத்தை நிறுத்தியது வேதனையும், கண்ணீரும் மக்களுக்கு வருகிறது என ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் தாமரை மலரப்போகிறது.! D-வாரிசு M-பணம் K-கட்ட பஞ்சாயத்து இதுதான் திமுக..! இறங்கி அடித்த ஜே.பி நட்டா

Follow Us:
Download App:
  • android
  • ios