பூஜையில் வைக்கப்பட்ட செங்கல்லை காலால் எட்டி உதைத்த திமுக MP செந்தில் குமார்: ரத்தம்கொதிக்கும் ராம ரவிக்குமார்

மஞ்சள் குங்குமம் பூசி பூமிபூஜைக்கு வைக்கப்பட்ட செங்கற்களை தனது காலால் எட்டி உதைத்து இந்து மதத்தை இழிவுபடுத்திய தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரின் செயல் கண்டிக்க தக்கது என்றும், அவருக்கு மனநல சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் இந்து தமிழர் கட்சி தலைவர் 
இராம. இரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். 

DMK MP Senthil Kumar Kicked Brick Placed in Puja: Rama Ravikumar Condemned.

மஞ்சள் குங்குமம் பூசி பூமிபூஜைக்கு வைக்கப்பட்ட செங்கற்களை தனது காலால் எட்டி உதைத்து இந்து மதத்தை இழிவுபடுத்திய தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரின் செயல் கண்டிக்க தக்கது என்றும், அவருக்கு மனநல சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் இந்து தமிழர் கட்சி தலைவர் 
இராம. இரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் என்பவர் தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக, இந்து மக்களின் பக்தி பண்பாட்டு உணர்வுகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு வருகிறார். அரசின் நலத்திட்ட பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கும் போது இது திராவிட மாடல் ஆட்சி , இங்கே இந்து மத அர்ச்சகர் மட்டும் இருக்கக் கூடாது. பாதிரியார் இருக்க வேண்டும், முஸ்லீம் முல்லா மெளலவி இருக்கவேண்டும், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் இருக்க வேண்டும் என்று பிரச்சனை செய்தது நாடே அறியும்.

DMK MP Senthil Kumar Kicked Brick Placed in Puja: Rama Ravikumar Condemned.

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் இன்று 22.09.2022 நடந்த பூமி பூஜை விழாவில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் திமுக கட்சியை சார்ந்த பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். உடனே தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் எத்தனை முறை உங்களுக்கு சொல்வது? இதுபோன்று பூசைகள் செய்யக்கூடாது என்று!  இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன் மிரட்டியுள்ளார். உடனே மஞ்சள் குங்குமம் பூசி பூமிபூஜைக்கு வைக்கப்பட்ட செங்கற்களை தனது காலால் எட்டி உதைத்து கேவலப்படுத்தியிருக்கிறார். MP யின் நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது.

இதையும் படியுங்கள்: செந்தில் பாலாஜி ஊழல் கேஸை தூசு தட்டபோறோம்.. உயர்நீதி மன்றத்தில் திமுக அரசுக்கு ஷாக் கொடுத்த காவல்துறை..

இந்து மத நம்பிக்கைகளை மட்டும் தொடர்ந்து கொச்சைப்படுத்தும் தர்மபுரி எம்.பி யின் நடவடிக்கை திமுக கட்சியை சார்ந்த பலருக்கும் ஆச்சரியத்தை வெறுப்பை உருவாக்கி இருக்கிறது. ஓட்டுக்கேட்டு வரும்போதெல்லாம் இப்படி இருக்கமாட்டார். இப்பொழுது இந்த நடவடிக்கை மாற்றத்திற்கு, இந்துமத நம்பிக்கைக்கு மட்டும் எதிராக திரும்புவதற்கு காரணம் தெரியவில்லை என திமுக கட்சிக்காரர்களிடமே எரிச்சலுடன், மிரட்டல் விடுத்து பேசும் இவருக்கு பலரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். நல்ல மனநல மருத்துவரிடம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கிறார்கள்.

DMK MP Senthil Kumar Kicked Brick Placed in Puja: Rama Ravikumar Condemned.

இந்து மதம் குறித்து திமுக துணை பொது செயலாளர் ஆ ராசா  சர்ச்சையான கருத்தை பேசி, திமுக அரசு கொண்டுவந்துள்ள மின்சார கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என இது போன்ற தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை மடைமாற்றம் செய்ய, மக்களிடம் கவனத்தை திசைதிருப்ப  திமுக கட்சி மக்கள் பிரதிநிதிகள் திட்டமிட்டு இந்துமத நம்பிக்கைகளை அவமதிப்பு செய்கிறார்களோ என்று சிந்திக்க தோன்றுகிறது. இதற்கு இந்து தமிழர் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இதையும் படியுங்கள்:  ராசாவை விட்டு பாஜக தொண்டர்களை கைது பண்றாங்க.. தாய்மார்களே கோவைக்கு வாங்க.. அலறும் அண்ணாமலை.

திமுக தர்மபுரி எம்பி செந்தில்குமாரை மக்கள் அரசியல் களத்திலிருந்து விரட்டியடிக்க கூடிய காலம் வெகுதொலைவில் இல்லை.
இவர் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும். மதசார்பற்ற அரசு திராவிட மாடல் திமுக அரசு என்று சொல்லும் செந்தில்குமார் அவர்களே, கிறிஸ்தவ திருச்சபைகளையும் இஸ்லாமிய மசூதிகளையும் அவரவர் மதம் சார்ந்தவர்கள் நிர்வாகம் செய்யும் போது இந்து சமய திருக்கோயில்களை மட்டும் அரசு நிர்வாகம் செய்வது எந்த வகையில் நியாயம்? இதுதான் திராவிட மாடலா? என ஒவ்வொரு இந்து பக்தரும் திமுக அரசை பார்த்து கேள்விகேட்க கூடிய காலம் நிச்சயம் உருவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios