செந்தில் பாலாஜி ஊழல் கேஸை தூசு தட்டபோறோம்.. உயர்நீதி மன்றத்தில் திமுக அரசுக்கு ஷாக் கொடுத்த காவல்துறை..
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழக்கை விரிவாக விசாரிக்க போவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழக்கை விரிவாக விசாரிக்க போவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தகவல் திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் ஆவார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமானோர் புகார் கொடுத்தனர். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அப்போது அதிமுக ஆட்சி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் வழக்கை கிடப்பில் போட்டனர்.
இதையும் படியுங்கள்: ஸ்டாலின் ஆட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தவே தமிழகத்தில் என்ஐஏ சோதனை.. ரத்தம் கொதிக்கும் நெல்லை முபாரக்.
ஆனால் சைபர் கிரைம் அவர் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்தது. செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் பிரபு, சகாயராஜ், தேவசகாயம், அன்னராஜ் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு சென்னை எம்.பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலை திமுகவில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்து வரும் செந்தில் பாலாஜி,
இதையும் படியுங்கள்: காரைக்குடியில் ஜேபி நட்டா..! நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் ..? நிர்வாகிகளோடு ஆலோசனை
தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகள் மீண்டும் விரிவாக விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அவருக்கு எதிரான மோசடி வழக்குகள் உள்ளிட்ட மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த இருப்பதாக கூறினார். கடையில் இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணையை செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.