Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் ஆட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தவே தமிழகத்தில் என்ஐஏ சோதனை.. ரத்தம் கொதிக்கும் நெல்லை முபாரக்.

எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  தலைவர்களை அச்சுறுத்தவே என்ஐஏவை ஏவி விட்டு ஒன்றிய அரசு சோதனை நடத்துகிறது என்றும், எங்கள் கட்சி தலைவர்களின் வீடுகளில் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்  என்றும், என்.ஐ.ஏ வின் செயல்பாடு மாநில சுயாட்சியை அச்சுறுத்துவதாக உள்ளது என்றும்  எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

 

NIA raid in Tamil Nadu to bring disrepute to Stalin's Government.. Nellie Mubarak condemned.
Author
First Published Sep 22, 2022, 3:51 PM IST

எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  தலைவர்களை அச்சுறுத்தவே என்ஐஏவை ஏவி விட்டு ஒன்றிய அரசு சோதனை நடத்துகிறது என்றும், எங்கள் கட்சி தலைவர்களின் வீடுகளில் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்  என்றும், என்.ஐ.ஏ வின் செயல்பாடு மாநில சுயாட்சியை அச்சுறுத்துவதாக உள்ளது என்றும்  எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். என்ஐஏ தமிழகத்தில் நுழைய முடியாத அளவுக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இன்று பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் சோதனை குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மேலப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:- 

NIA raid in Tamil Nadu to bring disrepute to Stalin's Government.. Nellie Mubarak condemned.

என்.ஐ.ஏ சட்டவிரோதமான சோதனை மற்றும் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் பரக் அப்துல்லா வீட்டில் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தி, டெல்லியில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் அடிப்படையில் அவரை என்ஐஏ கைது செய்துள்ளது. மதுரையில் எஸ்டிபிஐ மாநில செயலாளர் நஜிமா பேகம் வீட்டில் அத்துமீறி நுழைந்து, கையில் பை நிறைய பணம் எடுத்த சென்று வைத்துவிட்டு கைது செய்து அழைத்து செல்லும்போது அந்த  பணத்தை திரும்ப எடுத்து சென்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்:  eci: bjp: congress: பாஜக ரூ.307 கோடி செலவு ! 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக வாரி இறைப்பு

அவரது கணவர் கையெழுத்த போட மறுத்தபோது பத்து மாத குழந்தை கதறி அழுதபோதும் கையெழுத்து போட்டால் தான் பால் குடிக்க அனுமதிப்போம் என அராஜகத்தோடு மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட  எஸ்டிபிஐ பாப்புலர் பிராண்ட் ஆப்  தலைவர்களை உடனடியாக நிபந்தனையின்றி  விடுதலை செய்ய வேண்டும். மாநில சுயாட்சி பேசும் தமிழக முதல்வர் ஆட்சியின் சிறப்பை கெடுக்கவே இதுபோன்று கைது செய்கிறார்கள். எனவே ஜனநாயகபடி அனைத்து ஜனநாயக சக்திகளும் இதை  கண்டிக்க முன்வர வேண்டும். 

இதையும் படியுங்கள்:  தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி . சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

நாட்டில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இருந்தாலும் எஸ்டிபிஐ கட்சி உண்மையை சொல்கிறது ஒன்றிய அரசின் தவறுகளை  தோலுறிக்கும் எங்கள் போராடடத்தை முடக்கி விட்டால் இந்தியாவில் எந்த செயலையும் செய்து விடலாம் என மோடியும் அமித்ஷாவும் கருதுகிறார்கள். என்.ஐ.ஏ ஏவல்காரர்கள் போல் செயல்பட்டு வருகிறார்கள், இந்த சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை, போலி வழக்கில் நாடு முழுவதும் அராஜகத்தை நடத்தி வருகிறது, எனவே எங்கள் போரோட்டத்தை இன்னும் வீரியத்துடன் கொண்டு செல்வோம்.

NIA raid in Tamil Nadu to bring disrepute to Stalin's Government.. Nellie Mubarak condemned.  

பயங்கரவாதத்தை பேசி வரும் ஆர்எஸ்எஸ்மீது சோதனை நடத்த வக்கில்லாத ஒன்றிய அரசு எங்களை குற்றவாளிகளாக்க முயற்சித்து வருகிறது. எனவே அம்பேத்கர் காந்தியின் ஆத்மா அவர்களை மன்னிக்காது, சிறுபான்மை மக்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கைது நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில் தமிழகத்தில் என்ஐஏ நுழைய முடியாது என்கின்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும், எங்கள் அலுவலகத்தில. தீவிரவாத பயிற்சி எங்கயாவது நடைபெறுவதை நிரூபிக்க முடியுமா. 

பாஜக ஆர் எஸ் எஸ் கரங்களை ஒடுக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது. தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து இணையானது ஆனால் அவர்களுக்கே தெரியாமல் இந்த சோதனை நடத்துகிறார்கள். இது மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக உள்ளது என தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios