eci: bjp: congress: பாஜக ரூ.307 கோடி செலவு ! 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக வாரி இறைப்பு
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக பாஜக ரூ.340 கோடிக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக பாஜக ரூ.340 கோடிக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதில் உத்தரப்பிரேசத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த மாநிலத்தில் பெரும்பாலான தொகை செலவிடப்பட்டுள்ளது.
காஜியாபாத்தில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே மோதல்: கார் மோதிய பின்பும் அடிதடி நீடிப்பு
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உத்தரப்பிரேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக செலவிட்ட தொகை குறித்து தேர்தல் ஆணையத்திடம் செலவு அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி தாக்கல் செய்துள்ளது.
அதில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக பாஜக ரூ.340 கோடிக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.194 கோடி செலவிட்டுள்ளது. பாஜக தனது செலவில் ரூ.221.31 கோடி உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டும் செலவிட்டுள்ளது.
முத்ரா திட்டம் பயனற்றது! ரூ.3.73 லட்சத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுப்பிங்க? ப.சிதம்பரம் கேள்வி
ரூ.23.51 கோடி மணிப்பூருக்கும், ரூ.43.67 கோடி உத்தரகாண்ட் தேர்தல் செலவுக்கும், பஞ்சாப் தேர்தல் செலவுக்கு ரூ.36.69 கோடியும், கோவா தேர்தல் செலவுக்கு ரூ.19.06 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. விர்ச்சுவல் பிரச்சாரத்துக்காக பாஜக சார்பில் ரூ.11.97 கோடி செலவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரச் செலவு கடந்த ஜூலை 11ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் அந்த கட்சி ஒட்டுமொத்தமாக ரூ.194.80 கோடி செலவிட்டுள்ளது. இதில் ரூ.102.65 கோடி கட்சியின் செலவுக்கும் ரூ.90.23 கோடி வேட்பாளர்களின் செலவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ரூ.15.67 கோடி விர்ச்சுவல் பிரச்சாரத்துக்காக செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் தேர்தல் ஆணையம், வேட்பாளர்கள் செலவிடும் தொகை அளவை அதிகரித்தது. இதன்படி,மக்களவை வேட்பாளர்கள் ரூ.54 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாகவும், ரூ.70 லட்சத்திலிருந்து ரூ.95 லட்சமாகவும் அதிகரிக்கும்.
என்ஐஏ ரெய்டு: பிஎப்ஐ அமைப்புக்கு தடை வருமா?: அமித் ஷா முக்கிய ஆலோசனை
சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.28 லட்சமாகவும், ரூ.28லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.