காஜியாபாத்தில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே மோதல்: கார் மோதிய பின்பும் அடிதடி நீடிப்பு
உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் கல்லூரியைச் சேர்ந்த இரு பிரிவு மாணவர்களுக்கு சாலையில் நடுவே மிகவும் மோசமாக ஒருவருக்கு ஒருவர் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் கல்லூரியைச் சேர்ந்த இரு பிரிவு மாணவர்களுக்கு சாலையில் நடுவே மிகவும் மோசமாக ஒருவருக்கு ஒருவர் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
காஜியாபாத்தில் மசூரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் சீனியர், ஜூனியர் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டனர். திடீரென ஆக்ரோஷமாக மோதிக்கொண்டஇரு தரப்பினரும் சாலையின் நடுவரை ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர்.
கல்வி நிலையங்களில் ஹிஜாப்..! உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்தது..! தீர்ப்பு ஒத்திவைப்பு
இதனால்அப்பகுதியில் கூட்டம் கூடியது, அந்தப் பகுதியில் வேகமாக வந்த கார் ஹாரன் அடித்தும் ஒதுங்காத மாணவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் இரு மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர். ஆனால், நல்வாய்ப்பாக இருவருக்கும் காயம் ஏற்படவில்லை. மாணவர்கள் மீது கார் மோதியதைத் தொடர்ந்து மாணவர்கள் கவனம் கார் மீது திரும்பியது.
சக மாணவர்கள் மீது கார் மோதிவிட்டது என்பதை பார்த்தபின்பும், மாணவர்கள் தங்கள் சண்டையை நிறுத்தவில்லை. கார் மோதி விழுந்த இரு மாணவர்களும் மீண்டும் எழுந்து வந்து சண்டையிட்டனர். இதில் காரின் முன்பக்க கண்ணாடியும சேதமடைந்தது.
முத்ரா திட்டம் பயனற்றது! ரூ.3.73 லட்சத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுப்பிங்க? ப.சிதம்பரம் கேள்வி
இந்த விவகாரம் குறித்து காஜியாபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். காஜியாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐராஜ் ராஜா கூறுகையில் “ இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். சண்டையிட்ட மாணவர்களில் சிலரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். வீடியோல் மாணவர்கள் மீது மோதிய காரும் பறிமுதல்செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்
மோடிக்கு தூக்கு தண்டனை கிடைக்க தீஸ்தா செதல்வாத் சதிதிட்டம்: எஸ்ஐடி குற்றப்பத்திரிகை
காஜியாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் குடிபோதையில் வாகனத்தை செலுத்தினார். அப்போது போதையில் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால், எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர், இருவர் காயமடைந்தனர்