கல்வி நிலையங்களில் ஹிஜாப்..! உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்தது..! தீர்ப்பு ஒத்திவைப்பு

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான  மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

The Supreme Court has postponed the verdict on the hearing regarding the wearing of hijab in educational institutions

ஹிஜாப் அணிய தடை

கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த அம்மாநில அரசின் உத்தரவிற்கு எதிரான தொட்ப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப்  இஸ்லாத்தின் அடிப்படையான விஷயம் அல்ல,  சீருடை விவகாரத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் கிடையாது எனவும் சீருடை விவகாரங்களில் உரிய அறிவுறுத்தல்களை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் சிலர் சார்பிலும்,  அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள்  உச்சநீதிமன்றர்தில்  நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான  அமர்வில் விசாரக்கப்பட்டு வந்தது.

ஸ்டாலின் குறித்து சர்ச்சை போஸ்டர்...! அண்ணாமலையின் உதவியாளரை அதிரடியாக கைது செய்த போலீஸ்

The Supreme Court has postponed the verdict on the hearing regarding the wearing of hijab in educational institutions
ஹிஜாப் வெளியே தெரிகிறது

அப்போது, ஆடை அணிவது என்பது அடிப்படை உரிமை என நீங்கள் கூறுவீர்கள் ஆனால் ஆடை இல்லாமல் இருப்பதும் அடிப்படை உரிமை ஆகும். சிலுவை, ருத்ராட்சம் போன்றவை மத அடையாளங்கள் தான் அவற்றை அணிந்து கொண்டு மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வரும்பொழுது ஹிஜாபுக்கி மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும் ? என மனுதாரர் தரப்பில் வாதம் வைத்தனர். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், சிலுவை ருத்ராட்சம் போன்றவை வெளிப்படையாக தெரிவதில்லை அதே நேரத்தில் யாரும் அவர்களுடைய சட்டையை கழற்றி இவற்றை சோதிப்பமும் இல்லை ஆனால் ஹிஜாப் என்பது தனித்துவமாக  வெளியே தெரியக் கூடியதாக இருக்கிறது என தெரிவித்திருந்தனர். கல்வி நிலையங்களில் மத அடையாளங்கள் அணிந்து வரக்கூடாது என ஒரு அரசு கூறுனால், அது அனைத்து மதத்துக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும், கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு  சிறுபான்மையினர் மீது எழுதும் தீர்ப்பு போல உள்ளதாக மனுதாரர் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆ. ராசா போன்ற பிள்ளையை பெற்றதற்கு அவர் தாய் தான் வருத்தப்பட வேண்டும்.. செல்லூர் ராஜூ ஆவேசம்

The Supreme Court has postponed the verdict on the hearing regarding the wearing of hijab in educational institutions

தீர்ப்பு ஒத்திவைப்பு

அதேவேளையில், குறிப்பிட்ட வகை உடை உடுத்துவதைக் கண்டு மற்றவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படக் கூடாது என்பதே சீருடையிம் நோக்கம் ஆகும், அதனடிப்படையில் தான் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதே தவிர மதம் அடிப்படையில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது, இது  மம் என்ற விசயத்துக்கு அப்பாற்பட்ட பொதுவான  நடவடிக்கை என  கர்நாடகா அரசு சார்பில் வாதம் வைக்கப்பட்டதுஅனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் , இந்த வழக்கு மீதான தீர்ப்பை தேதிக்குறிப்பிடப்படாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதையும் படியுங்கள்

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு..! பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios