பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு..! பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு
காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்ட நிலையில் தற்பொழுது 8 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
காலாண்டு தேர்வு தொடங்கியது
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகள் முழுமையாக பள்ளிகள் செயல்படாத நிலையில் இந்த ஆண்டு தான் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. ஆன் லைன் மூலமாகவே பாடங்களை கவனித்து தேர்வு எழுதி வந்த மாணவர்கள் தற்போது நேரடி வகுப்பில் கலந்து கொண்டு காலாண்டு தேர்வை எழுதி வருகின்றனர். இந்தநிலையில் காலாண்டு தேர்வு கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்டாலின் குறித்து சர்ச்சை போஸ்டர்...! அண்ணாமலையின் உதவியாளரை அதிரடியாக கைது செய்த போலீஸ்
விடுமுறை நீட்டிப்பு
இந்தநிலையில் அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு அக்டோபர் 1-5 வரை விடுமுறை என அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பிற்கு அக்டோபர் 1-8 வரை விடுமுறை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 6 முதல் 8ஆம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 1-5 வரை விடுமுறை எனவும், 6-ம் தேதியில் இருந்து அவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் எனவும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இதையும் படியுங்கள்
பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது..! திமுகவின் அலட்சியப் போக்கே காரணம்- ஓபிஎஸ் குற்றச்சாட்டு