Popular Front Of India: என்ஐஏ ரெய்டு: பிஎப்ஐ அமைப்புக்கு தடை வருமா?: அமித் ஷா முக்கிய ஆலோசனை
தீவிரவாதச் செயல்களுக்கு உதவியாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தீவிரவாதச் செயல்களுக்கு உதவியாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறைச் செயலாளர் அஜெய் பல்லா, தேசிய விசாரணை முகமை தலைவர் தினகர் குப்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் நிலையில் நாடுமுழுவதும் பிஎப்ஐ அமைப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அமித் ஷா கேட்டறிந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ஐஏ ரெய்டில் பிஎப்ஐ நிர்வாகிகள் எந்தெந்த மாநிலத்தில் எத்தனை பேர் கைது? தமிழகத்தில் எத்தனை பேர்?
பிஎப்ஐ அமைப்பை ஏற்கெனவே தடை செய்ய மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதற்கிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதால், தடை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டில் நடந்த பல்வேறு கலரங்களுக்கு பின்புலத்தில் நிதியுதவி செய்ததாக பிஎப்ஐ அமைப்பு மீது குற்றச்சாட்டு இருக்கிறது.
கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!
2020ம் ஆண்டு டெல்லி கலவரத்துக்கு நிதியுதவி செய்தது, ஹாத்ரஸ் தலித் பெண் பலாத்காரக் கொலை விவகாரத்தில் பிஎப்ஐ அமைப்பு தூண்டிவிட்டது, ராமநவமி பண்டிகையின் போது, பல்வேறு மாநிலங்களில் நடந்த வன்முறையை தூண்டிவிட்டது, கர்நாடகத்தில் நடந்த ஹிஜாப் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிஎப்ஐ அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பிஎப்ஐ அமைப்புக்கு எதிராகவும், அதன் மாணவர் அமைப்பான கேம்பஸ் பிரண்ட் இந்தியாவுக்கு எதிராக சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்குகளும் அமலாக்ககப்பிரிவு அதிகாரிகளால் நிலுவகையில் உள்ளன. இதனால் பிஎப்ஐ அமைப்பை தடை செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கடந்த ஜூலை மாதம் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதன்பின் எந்தத் தகவலும் இல்லை.
யார் இந்த பிஎப்ஐ அமைப்பு? என்ஐஏ ரெய்டில் பிஎப்ஐ நிர்வாகிகள் 100 பேர் கைது?காரணம் என்ன?
இந்நிலையில் 11 மாநிலங்களில் பிஎப்ஐ அலுவலகங்களிலும், நிர்வாகிகள் வீடுகளிலும், எஸ்டிபிஐ அலுவலகங்களிலும் என்ஐஏ அதிகாரிகள், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று ரெய்டு நடத்தியுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர். ஏராளமான ஆவணங்கள், பென்ட்ரைவ், லேப்டாப் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், ஆட்சேர்பு, மூளைச் சலவை, பயிற்சிஅளித்தல் ஆகியவற்றுக்கு பிஎப்ஐ அமைப்பு துணையாக இருந்தால், தடை செய்வதுகுறித்து மத்தியஅரசு பரிசீலிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன