PFI:NIA: என்ஐஏ ரெய்டில் பிஎப்ஐ நிர்வாகிகள் எந்தெந்த மாநிலத்தில் எத்தனை பேர் கைது? தமிழகத்தில் எத்தனை பேர்?
நாட்டின் 11 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா(பிஎப்ஐ) அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) இன்று நடத்திய ரெய்டில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் 11 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா(பிஎப்ஐ) அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) இன்று நடத்திய ரெய்டில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், தீவிரவாதச் செயல்களுக்கான பயிற்சி அளிக்க முகாம் அமைத்தல், தீவிரவாத அமைப்புகளில் சேர்வதற்கு ஆட்களை மூளைச் சலவை செய்தல் ஆகியவற்றை பிஎப்ஐ அமைப்பும், அதன் நிர்வாகிகளும், எஸ்டிபிஐ கட்சியும் செய்துவருவதாக என்ஐஏ அமைப்புக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, என்ஐஏ அமைப்பும், அமலாக்கப்பிரிவும் இணைந்து 11 மாநிலங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றன.
யார் இந்த பிஎப்ஐ அமைப்பு? என்ஐஏ ரெய்டில் பிஎப்ஐ நிர்வாகிகள் 100 பேர் கைது?காரணம் என்ன?
இந்த ரெய்டில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ரெய்டுக்கான உண்மையான காரணம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவி்ல்லை.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் பிஎப்ஐ நிர்வாகிகள், 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகாவில் தலா 20 பேர், தமிழகத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அசாமில் 9 பேர், உ.பியில் 8 பேர், ஆந்திர பிரதேசத்தில் 5 பேர், மத்தியப் பிரதேசத்தில் 4 பேர், புதுச்சேரி, டெல்லியில் தலா 3 பேர், ராஜஸ்தானில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.என்ஐஏ அமைப்பு நடத்திய ரெய்டிலேயே மிகப்பெரிய ரெய்டு இதுவாகத்தான் இருக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் “ பிஎப்ஐ அமைப்பின் தேசிய, மாநில, உள்ளூர் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
மாநில குழு அலுவலகமும் சோதனையிடப்படுகிறது. எதிர்ப்புக் குரல்களை இதுபோன்று விசாரணை அமைப்புகள் மூலம் அடக்குவதை வன்மையாக எதிர்க்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ம்ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம்தொடர்பாக டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக கலவரத்தைத் தூண்ட நிதியுதவி செய்ததாக பிஎப்ஐ அமைப்பு மீது அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
உ.பி. ஹாத்ராஸ் தலிப் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை தூண்டிவிட்டதிலும் பிஎப்ஐ அமைப்புக்கு பங்குள்ளதாகக் கூறப்படுகிறது
இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் பிஎப்ஐ அமைப்பின் மாணவர் அமைப்பான கேம்பஸ் பிரண்ட் இந்தியா நிர்வாகிகள் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், அதன் மூலம் கலவரத்தையும், வன்முறையையும் தூண்ட அந்த பணத்தை பயன்படுத்தினார்கள் என அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மோடிக்கு தூக்கு தண்டனை கிடைக்க தீஸ்தா செதல்வாத் சதிதிட்டம்: எஸ்ஐடி குற்றப்பத்திரிகை
அந்தக் குற்றப்பத்திரிகையில் சிபிஐ பொதுச்செயலாளர் கே.ஏ.ராப் ஷெரீப், சிஎப்ஐ பொருளாளர் அதிகுர் ரஹ்மான், டெல்லி சிஎப்ஐ பொதுச்செயலாளர் மசூத் அகமது, பத்திரிகையாளர் சித்திக் கப்பன், முகமது ஆலம் ஆகியோர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் இன்று மட்டும் 14 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். பெங்களூரு, மங்களூரு, தட்சின கன்னடா, உத்தர கன்னடா, கலாபுர்கி ஆகிய இடங்களில் ரெய்டு நடந்தது.
எஸ்டிபிஐ நிர்வாகிகள், பிஎப்ஐ நிர்வாகிகள் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ஆவணங்கள், செல்போன்கள், புத்தகங்கள், லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்டவற்றை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல்செய்தனர்.