Popular Front of India:யார் இந்த பிஎப்ஐ அமைப்பு? என்ஐஏ ரெய்டில் பிஎப்ஐ நிர்வாகிகள் 100 பேர் கைது?காரணம் என்ன?
நாடுமுழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்புக்கு எதிராக அதன் நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ), அமாலக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
நாடுமுழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்புக்கு எதிராக அதன் நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ), அமாலக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
உத்தரப்பிரதேசம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடந்துவரும் இந்த ரெய்டில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
தமிழகத்தில் PFI நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை- காரணம் என்ன..?
எதற்காக இந்த ரெய்டு?
என்ஐஏ சார்பில் நாடுமுழுவதும் நடத்தப்படும் ரெய்டுகளில் இதுவரை நடந்த ரெய்டுகளில் இதுதான் மிகப்பெரியதாகும். பிஎப்ஐ அமைப்பு அலுவலகங்கள், அதன் நிர்வாகிகள் வீடுகள், சொந்தமான இடங்களில் என்ஐஏ ரெய்டு நடத்தி வருகிறது.
தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், தீவிரவாதச் செயல்களுக்கான பயிற்சி அளிக்க முகாம் அமைத்தல், தீவிரவாத அமைப்புகளில் சேர்வதற்கு ஆட்களை மூளைச் சலவை செய்தல் ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ரெய்டு நடத்தப்படுகிறது
கேரளாவில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது. கேரள பிஎப்ஐ தலைவர், செயலாளர், மாநிலத் தலைவர் ஆகியோர் போலீஸார் பாதுகாப்பில் உள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி நகரில் பிஎப்ஐ மாநிலத் தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உள்ளது. இங்கு அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். பத்தினம்திட்டா மாவட்ட பிஎப்ஐ செயலாளர் முந்து கோட்டக்கல் வீட்டிலும் என்ஐஏ ரெய்டு நடக்கிறது
கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!
திருவனந்தபுரம் பூந்துரா பகுதியைச் சேர்ந்த பிஎப்ஐ தலைவர் கரமனா அஷ்ரப் மவுலவி வீட்டிலிருந்து ஏராளமான பென்டிரைவ்களை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
யார் இந்த பிஎப்ஐ அமைப்பு
2006ம் ஆண்டு தேசிய மேம்பாட்டு முன்னணி(என்டிஎப்) அமைப்புதான் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பாக மாறியது. கடந்த 2006ம் ஆண்டு, தேசிய மேம்பாட்டு முன்னணி, மனித நீதி பாசறை, கர்நாடக கண்ணிய அமைப்பு, கோவா மக்கள் கூட்டமைப்பு, ராஜஸ்தானில் சமூக சமுதாயம் மற்றும் கல்விச் சமூகம், மேற்கு வங்கத்தில் நகரிக் அதிகார் சுரக்ஸா சமிதி, மணிப்பூரில் லிலாங் சமூக கூட்டமைப்பு, ஆந்திராவில் சமூகநீதி கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை இணைத்து பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்று மாறியது. இது தீவிர இஸ்லாமிய அமைப்பாகும்.
தேச விரோத செயல்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக மாநில அரசுகளாலும், மத்திய அரசாலும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குற்றம்சாட்டப்படுகிறது.
மக்களுக்கு சுதந்திரம், பாதுகாப்பு, அதிகாரம் ஆகியவற்றை வழங்குகிறோம் எனக் கூறிக்கொண்டு தங்களை நவீன சமூகதாய இயக்கமாக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு வெளிப்படுத்தி வருகிறது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு தனிச்சட்டம் நீதிமன்றம், தலித்துகள் கொடுமை, பழங்குடியினர் பாதுகாப்பு, முஸ்லிம் மாணவர்களுக்கு உதவி போன்றவற்றை வலியுறுத்தி வருகிறது.
பத்து ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா? அதை வாங்க மறுத்தா என்ன ஆகும் தெரியுமா?
இந்த அமைப்புக்கு பல்வேறு பிரிவுகள் உள்ளன, குறிப்பாக தேசிய மகளிர் முன்னணி(என்டபிள்யுஎப்), கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் உள்ளன. கேரளா மற்றும் கர்நாடகத்தில் பெரும்பாலும் பிஎப்ஐ அமைப்புகளுக்கும், சங்பரிவார் அமைப்புகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து செயல்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் மீது சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருத்தல், கடத்தல், கொலை வழக்கு, கொலை முயற்சி, வெறுப்புப் பிரச்சாரம் செய்தல், கலவரம் செய்தல், வெடிகுண்டு வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பிஎப்ஐ அமைப்பு மறுத்துவருகிறது.
கடந்த 2012ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு வேறு ஏதுமில்லை, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் அமைப்பின் பிரிவான சிமி அமைப்பின் மறு எழுச்சிதான் என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து, சுதந்திரப் பேரணி நடத்தவும் பிஎப்ஐ அமைப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் முன்னள் தேசியச் செயலாளராக இருந்த அப்துல் ரஹ்மான் என்பவர்தான் தற்போது பிஎப்ஐ அமைப்பின் தேசியத் தலைவராக உள்ளார். சிமி மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது என்பவர்தான் மாநிலச் செயலாளராக உள்ளார். சிமி அமைப்பில் இருந்த பெரும்பாலான நிர்வாகிகள் பிஎப்ஐ அமைப்பில் நிர்வாகிகளாக உள்ளனர்.
கார்களில் பின் இருக்கை சீட்பெல்ட் அலாரம் கட்டாயம்: மத்திய அரசு புதிய விதி
கடந்த 2001ம் ஆண்டு சிமி அமைப்பு தடை செய்யப்பட்டது, ஆனால், 1993ம் ஆண்டே பிஎப்ஐ அமைப்பு தொடங்கப்பட்டதாக கூறும் இந்த நிர்வாகிகள் சிமியின் ஒப்பிடுவதும், தொடர்பு இருப்பதும் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனத் தெரிவித்தனர். ஆனால், பிஎப்ஐ அமைப்புக்கும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பி.சி.கடோச் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.
2010ம் ஆண்டு ஜூலை மாதம் கேரள போலீஸார் நடத்திய ரெய்டில் பிஎப்ஐ அமைப்பிடமும், நிர்வாகிகளிடமும் இருந்து, சிடி, தலிபான், அல்கொய்தா பிரச்சாரங்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 2013ம் ஆண்டு கேரள போலீஸார் பிஎப்ஐ அமைப்பு அலுவலகங்களில் நடத்திய ரெய்டில், வெடிகுண்டுகள், வெடிமருந்துகள், கத்தி, மூலப்பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
பிஎப்ஐ அமைப்பில் இருந்த ஏராளமானோர் சிரியா சென்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக கேரள போலீஸார் தெரிவிக்கிறார்கள்