பத்து ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா? அதை வாங்க மறுத்தா என்ன ஆகும் தெரியுமா?
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் அபராதமும் மூன்று வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் அபராதமும் மூன்று வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள், மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட வாங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி தடை செய்துவிட்டது என்கிற வதந்தி பரவியது.
இதையும் படிங்க: TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 .. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் இங்கே
மேலும் பத்து ரூபாய் நாணயங்களைப் போலப் போலி நாணயங்கள் சந்தையில் இருக்கின்றன என்கிற செய்தியும் பரவியதை அடுத்து மக்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தனர். சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் பலரும் எண்ணியுள்ளனர். பொதுமக்கள் மட்டுமின்றி ஒரு சில பகுதிகளில் அரசு அலுவலங்களிலும் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கின்றனர்.
இதையும் படிங்க: 20 ஆண்டுகளுக்குப்பின்!காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்தல்: நாளை அறிவிக்கை வெளியீடு
ஆனால், பத்து ரூபாய் நாணயங்களை யாரேனும் வாங்க மறுத்தாலோ, செல்லாது என்றாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என கூறப்படுகிறது. இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது புகார் அளித்தால், இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவு ஏ-வின் படி குற்றம். எனவே, இந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.