rear seat belt: car seat belt: கார்களில் பின் இருக்கை சீட்பெல்ட் அலாரம் கட்டாயம்: மத்திய அரசு புதிய விதி
சாலை விபத்துக்களில் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கில், கார்களில் பின் இருக்கையில் அமர்வோர் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் ஒலிப்பதை கட்டாயமாக்கும் வகையில் வரைவு மசோதாவை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சாலை விபத்துக்களில் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கில், கார்களில் பின் இருக்கையில் அமர்வோர் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் ஒலிப்பதை கட்டாயமாக்கும் வகையில் வரைவு மசோதாவை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு மசோதா குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை அக்டோபர் 5ம் தேதிக்குள் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கலாம்.
கணிக்க முடியாத தங்கம் விலை! சவரன் ரூ37ஆயிரத்துக்கும் கீழ் சரிவு: இன்றைய நிலவரம் என்ன?
சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். அவர் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தும்,சீட் பெல்ட் அணியாமல் இருந்தது உயிரிழப்புக்கு ஒரு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, காரில் பின் இருக்கையில் அமர்வோரும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை மத்திய சாலைப் போக்குவரத்துஅமைச்சகம் கொண்டுவர இருக்கிறது
இதன்படி எம் மற்றும என் வகை வாகனங்களில் பின் இருக்கையில் அமர்வோர் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால், அவர்களுக்கு ஆடியோ-வீடியோ மூலம் எச்சரிக்கை செய்யும் அலாரம் பொருத்தப்பட வேண்டும்.அதுமட்டுமல்லாமல் அதிவேகமாக வாகனம் சென்றாலும் அலாரம் ஒலி எழுப்பப்பட வேண்டும்.
எம்-1 வாகனங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்: எம்-1 வாகனங்கள் என்பது ஓட்டுநர் இருக்கையும் சேர்த்து 8 பேருக்கு மிகாமல் அமரும் வாகனமாகும்.
செலவு குறைப்பாம்! 80 பைலட்களை 3 மாத விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்
இந்த வாகனத்தில் ஓட்டுநர் அதிவேகமாக வாகனத்தை இயக்கினால், எச்சரிக்கை ஒலி எழுப்பது கட்டாயம், ஓட்டுநர், ஓட்டுநர் அருகே அமர்ந்திருப்பவர், பின்இருக்கையில் இருப்போர் அனைவருக்கும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் எச்சரிக்கை மணி, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், டிரைவர் ஏர்பேக், கோ-டிரைவர் ஏர்பேக் இருப்பது கட்டாயமாகும். சைல்ட் லாக் வசதி இதில் அனுமதியில்லை
எம் மற்றும் என் வகை வாகனங்களுக்குவிதிகள். எம்-வகை வாகனங்கள் பயணிகள் ஏற்றிச் செல்வது, என்-வகை வாகனங்கள் சரக்குகள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களாகும்.
இந்த வகை வாகனங்களுக்கு ரிவர்ஸ் பார்க்கிங் எச்சரிக்கை மணி கட்டாயம் இருக்கவேண்டும். சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கினால் ஓட்டுநரையும், பயணிகளையும் எச்சரிக்கை செ்யயும் வகையில் 3 லெவல்களில் எச்சரிக்கை செய்தல் அவசியமாகும்.
அசுர வளர்ச்சியில் அதானி குழுமம்! பங்குச்சந்தையில் டாடா குழுமத்தையே பின்னுக்குத் தள்ளி சாதனை
முதல் லெவல் எச்சரிக்கை என்பது, காட்சி எச்சரிக்கை. அதாவது வாகனத்தில் இக்னிஷன் ஸ்விட்ச் ஆன்செய்தவுடன் சீட் பெல்ட் அணிவதற்கான எச்சரிக்கை விளக்கு எரிதல். ஓட்டுநர், ஓட்டுநர் அருகே இருப்போர், பின்பக்க இருக்கையில் அமர்வர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் விளக்கு எரிதல்
2வது லெவல் எச்சரிக்கை என்பது, வீடியோ மற்றும் ஆடியோ மூலம் காரில் உள்ளவர்களுக்கு சீட் பெல்ட் அணிவது குறித்து எச்சரி்க்கை செய்தல். வாகனத்தை ஓட்டுநர் வேகமாகச் செலுத்தும்போதும் சீட் பெல்ட் அணிவதை எடுத்துச் சொல்லும் எச்சரிக்கை ஒலி வைத்தல்.
மூன்றாவதாக சீட் பெல்ட்டை சரியாக அணியாவிட்டாலும், சரியாக பொருந்தாமல் இருந்தாலும் எச்சரிக்கை மணி ஒலித்தலாகும்.
இதற்கு முன் இருந்த விதிப்படி, சீட் பெல்ட் என்பது, ஓட்டுநர் மற்றும் முன்பக்கத்தில் அமர்ந்திருப்போர் சீட் பெல்ட் அணியாமல்இருந்தால், ரூ.1000 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. இந்தச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால், பின் இருக்கையில் அமர்வோர் சீட்பெல்ட் அணியாமல் இருந்தாலும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.