தமிழகத்தில் தாமரை மலரப்போகிறது.! D-வாரிசு M-பணம் K-கட்ட பஞ்சாயத்து இதுதான் திமுக..! இறங்கி அடித்த ஜே.பி நட்டா
பாரதியஜனதா கொள்கை பிடிப்புள்ள கட்சி. பாஜக மட்டுமே தற்போது இந்தியாவில் ஒரே தேசிய கட்சியாக உள்ளது. மற்ற கட்சிகள் பிராந்திய கட்சிகளாக சுருங்கி வருவதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தாமரை மலரப்போகிறது
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை இலக்காக கொண்டு பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அந்தவகையில் மாவட்ட தலைவர்களையும் புதிதாக நியமித்துள்ளது. இந்தநிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். அப்போது பாஜகவின் நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து நேற்று மாலை காரைக்குடியில் நடைபெற்ற பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜேபி நட்டா, காரைக்குடியில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு மக்கள் அதிகளவு கூடியுள்ளதாக குறிப்பிட்டார். எனவே பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் எதிர்காலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தாமரை மலரப்போகிறது என நம்பிக்கை தெரிவித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏற்கனவே வழங்கிய நிதி ஒதுக்கீடு தவிர கூடுதலாகவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்,.
கடன் பெற கட்டுப்பாடு..! மத்திய அரசுக்கு ஒரு நியாயம், மாநில அரசுக்கு ஒரு நியாயமா..? பிடிஆர் ஆவேசம்
பாஜக மட்டுமே தேசிய கட்சி
தமிழகத்தின், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நவீன வசதிகளோடு மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்திலிருந்து கடத்தி செல்லப்பட்ட பாரம்பரிய பொருட்களை மீட்டு கொடுத்துள்ளோம். பாரதிய ஜனதா, கொள்கை பிடிப்புள்ள கட்சியென குறிப்பிட்டவர், பாஜக மட்டுமே தற்போது இந்தியாவில் ஒரே தேசிய கட்சியாக உள்ளது. மற்ற கட்சிகள் பிராந்திய கட்சிகளாக சுருங்கி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.பிராந்திய கட்சிகள் தற்போது வாரிசு கட்சிகளாக சுருங்கிவிட்டதாக குறிப்பிட்ட அவர், திமுக, ஒய்.எஸ்.ஆர்., டி.ஆர்.எஸ், அகாலி தளம், பிடிபி, என்சிபி, சமாஜ்வாடி, திரிணாமூல், முக்தி மோர்சா, என குறிப்பிட்டார். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலத்தில் குடும்ப ஆட்சியும், குடும்ப அரசியலும் நடைபெறுவதாக தெரிவித்தார். திமுகவில் இதற்கு முன்பு கருணாநிதி இருந்தார். இப்போது ஸ்டாலின் வந்துள்ளார். அடுத்து அவரது மகன் வருவார். இது என்ன மாதிரியான ஜனநாயகம்? என கேள்வி எழுப்பினார்.
காரைக்குடியில் ஜேபி நட்டா..! நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் ..? நிர்வாகிகளோடு ஆலோசனை
திமுக மிகப்பெரிய பூஜ்யம்
DMK வில் D என்றால் Dyanasty (வாரிசு), M என்றால் Money (பணம்), K என்றால் கட்ட பஞ்சாயத்து. இதுதான் திமுக என விமர்சித்தவர், திமுகவுக்கு எந்த குறிக்கோளும் இல்லை. கொள்கை ரீதியாக திமுக பெரிய பூஜ்ஜியம். திமுகவின்கொள்கை எப்போது நாற்காலியை பற்றிதான் என குற்றம்சாட்டினார். கொரோனா காலத்தில் பிரதமர் மோடி திறமையாக செயல்பட்டு, நமது நாட்டு மக்களை காப்பாற்றினார். அதோடு உலக நாடுகளுக்கும் உதவி செய்து, உலகின் உன்னத தலைவர் ஆனார். உற்பத்தியில் இறக்குமதி என்ற நிலையில் இருந்த இந்தியாவை தற்போது ஏற்றுமதி என்று நிலைக்கு பா.ஜனதா ஆட்சி கொண்டு வந்துள்ளது. உலகமே பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் இந்த நேரத்தில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன், மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்