கடன் பெற கட்டுப்பாடு..! மத்திய அரசுக்கு ஒரு நியாயம், மாநில அரசுக்கு ஒரு நியாயமா..? பிடிஆர் ஆவேசம்

மத்திய அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கு முன்னரே தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்ததாக நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Minister PTR has said that the central government will impose restrictions on the state government in getting loans

பண வீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

தமிழக நிதி நிலைமை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த  நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பண வீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டதாக தெரிவித்தார்.  கொரோனா காலத்தில் மக்களிடையே பணப்பழக்கம் குறையாத வகையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு,  தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்க நடவடிக்கை மேற்கொண்டுதல் அதன் மூலம் சாமானிய மக்களுக்கு அவர்களின் வருவாய் தடை பெறாத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார். மத்திய அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கு முன்னரே தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்ததாகவும் தெரிவித்தார். 

Minister PTR has said that the central government will impose restrictions on the state government in getting loans

மாநில அரசுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

கொரோனா காலகட்டத்திலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் 13,000 கோடி செலவில் பொது விநியோகம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தமிழக அரசு மேற்கொண்டதாக கூறினார். தமிழகத்தின் வருவாய் அதிகரிக்கும் வேலையில், அரசின் கடன் குறைப்பு மற்றும் பெற்ற கடனுக்கான வட்டி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் மீண்டும் ஜெயலலிதா ஆகியோர் இருந்தவரை தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருந்ததில்லை எனவும் அதன் பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு பின்னர் தான் கடந்த 6 ஆண்டுகளாக தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக  தெரிவித்தார். மாநில அரசுகள் கடன் பெறுவதில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அதே நேரத்தில் மத்திய அரசு கட்டுப்பாடு இன்றி அதிகளவு கடன்களை பெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

நாட்டை மதத்தால் துண்டாக்க முயற்சி! SDPI,PFI மீதான நடவடிக்கை பழிவாங்கும் போக்கு!பாஜகவுக்கு எதிராக சீறும் சீமான்

Minister PTR has said that the central government will impose restrictions on the state government in getting loans

தேவையற்ற செலவு குறைப்பு

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று பொது விநியோக திட்டம் தேவையற்ற செலவுகளை குறைப்பது மற்றும் துறைகளின் மூலம் பெறக்கூடிய வருவாயை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவித்தார். ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டை விட 37% அதிகரித்துள்ளதாகவும் அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட வருவாய் வரி 23% அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர் அரசின் கடனும் சிறிது குறைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். அரசின் ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறை 4.61%  இருந்த நிலையில் தற்போது 3.50 % குறைந்து இருப்பதாகவும் இதனை வரும் காலங்களில் மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு..! திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது...! அண்ணாமலை
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios