Asianet News TamilAsianet News Tamil

"காங்கிரசுக்கு நோ.. கூட்டணிக்கு ஓகே.." 3ம் அணியை இணைக்கும் மம்தா .. ஸ்கெட்ச் யாருக்கு தெரியுமா ?

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. 

West bengal cm mamta banarjee request to alliance join against bjp party at 2024 mp elections
Author
Tamilnadu, First Published Mar 12, 2022, 1:08 PM IST

பாஜக Vs காங்கிரஸ் :

அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜகவின் அபார வெற்றி அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல தலைவர்களும் தேசிய அரசியலில் கால்தடம் பதிக்க முயல்கின்றனர். 

West bengal cm mamta banarjee request to alliance join against bjp party at 2024 mp elections

பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுக்கும் வகையில் தங்களால் இருக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். மாநில அளவில் ஆளுமை வாய்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் டெல்லி அரசியலில் கால் வைக்க முயல்கின்றனர். இப்போது பாஜகவுக்கு எதிராகத் தேசிய அளவில் இருக்கும் கட்சியாகக் காங்கிரஸ் உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்குப் பதிலாக அந்த இடத்தை விரைவில் வேறொரு கட்சி பிடிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

மூன்றாவது அணி :

குறிப்பாக எதிர்த்தரப்பில் இருக்கும் 3 மாநில முதல்வர்கள் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானாவின் கே சந்திரசேகர் ராவ் மற்றும் டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வரும் காலத்தில் பிரதமர் பதவி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். பஞ்சாபில் ஆம் ஆத்மியின் அமோக வெற்றியின் மூலம், அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய அரசியலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். 

கோவா மற்றும் மணிப்பூர் தேர்தல்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸின் தோல்வி அடைந்துள்ளது இந்தப் போட்டியில் மம்தாவை சற்று பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சி விரும்பினால் 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட தயார் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

West bengal cm mamta banarjee request to alliance join against bjp party at 2024 mp elections

மம்தா பானர்ஜி :

‘5 மாநில தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடைய வேண்டாம், நேர்மறையாக சிந்தியுங்கள். 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறுவது நடைமுறை சாத்தியம் அற்றது’ என்றார். 

பாஜக- காங்கிரஸ்  அல்லாத மாற்று கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரள்வதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது பாஜகவுக்கு எதிராக எந்த அளவுக்கு பயனளிக்கும் என்று தெரியவில்லை. 

Follow Us:
Download App:
  • android
  • ios