சனாதான தர்மத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்... ஹெச். ராஜா அதிரடி!!
முன்னோர்கள் பாதுகாத்த சனாதான தர்மத்தை காப்பாற்றி அடுத்த தலைமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
முன்னோர்கள் பாதுகாத்த சனாதான தர்மத்தை காப்பாற்றி அடுத்த தலைமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், நம் பாரத தேசத்தில் நாம் தினமும் கடைபிடித்து வந்த பல கலைகளை மேலை நாடுகள் இன்று பாடமாக மாற்றியுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக யோகா உள்ளிட்டவற்றை சிறு மாற்றம் செய்து அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வரவில்லை என்றால் நான் படித்திருக்கவே மாட்டேன் என்று சிலர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ரவுடிகள் தான் பாஜகவில் இணைவார்கள்... நாராயணசாமி கடும் விமர்சனம்!!
ஆனால் நம்முடைய பாரம்பரியத்தை நாம் மறந்து விட்டோம். என் நாட்டை பற்றி திரித்து கூறப்பட்ட சரித்திரத்தையே நான் படித்தேன் என்று நேருவே தெரிவித்துள்ளார். 400 ஆண்டுக்கு முன்பே நாளந்தா பல்கலைக்கழகத்தில் 10,000 மாணவர்கள் மற்றும் ஓராயிரம் ஆசிரியர்கள் இருந்துள்ளனர். இது நாம் நம் கலாச்சார பண்போடு இப்போது விலகி இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. ஆன்மீக தேடலில் முதல் பாடம் என்பது நாம் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: அண்ணாமலையின் பேச்சு எங்களுக்கு வேத வாக்கு அல்ல... செல்லூர் ராஜூ பரபரப்பு கருத்து!!
இந்தியாவில் மூன்று மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களுக்கு நான் சென்றுள்ளேன். தமிழகத்தில் உள்ளதைப் போல் கோவில்களும் அதற்கான சொத்துக்களும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. ஆனால் நாம் இதைப் பற்றி கவலைப்படவில்லை.இன்று 2000 கோயில்கள் சேதம் அடைந்துள்ளது என்று அரசு நீதி மன்றத்தில் கூறுகிறது. நம் முன்னோர்கள் பாதுகாத்த சனாதான தர்மத்தை அதன் அடையாளங்களை காப்பாற்றி அடுத்த தலைமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.