அண்ணாமலையின் பேச்சு எங்களுக்கு வேத வாக்கு அல்ல... செல்லூர் ராஜூ பரபரப்பு கருத்து!!
அதிமுக பாஜக கூட்டணி இறுதி உறுதி என சொல்ல முடியாது என அண்ணாமலை அவருடைய கருத்தை கூறியிருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி இறுதி உறுதி என சொல்ல முடியாது என அண்ணாமலை அவருடைய கருத்தை கூறியிருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுகவுக்கு கிடைத்த அருமையான தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். அதிமுகவினர் அவரை பல வடிவங்களில் ரசிக்கிறார்கள். எடப்பாடி மீண்டும் முதல்வராகவில்லையே என மக்கள் வருத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் எங்கு சென்றாலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கிடைத்த வரவேற்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைக்கிறது.
இதையும் படிங்க: பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சாத்தியமில்லாதது... சீமான் கருத்து!!
அதிமுக பாஜக கூட்டணி இறுதி உறுதி என சொல்ல முடியாது என அண்ணாமலை அவருடைய கருத்தை சொல்லி உள்ளார். தன் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த அவ்வாறு பேசி உள்ளார். அண்ணாமலையின் பேச்சு எங்களுக்கு வேத வாக்கு அல்ல. எங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமியின் வாக்கே வேதவாக்கு. அண்ணாமலை ஒருகட்சியை வளர்க்க என்ன பேச வேண்டுமோ அதை பேசியுள்ளார் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அண்ணாமலை அவரின் கருத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரவுடிகள் தான் பாஜகவில் இணைவார்கள்... நாராயணசாமி கடும் விமர்சனம்!!
அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என கூறியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கும் இன்னும் எவ்வளவோ காலம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் இடங்கள் ஒதுக்கீடு குறித்து தேர்தல் நடைபெறும் நேரத்தில் அறிவிக்கப்படும். பாஜக, அதிமுக கூட்டணி தொடரும் என்பது குறித்து அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளனர். தோழமை குறித்து நட்டாவும், அமித்ஷாவும் கூறிவிட்டனர். எங்கள் கருத்தை கேட்பதில் ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.