ரவுடிகள் தான் பாஜகவில் இணைவார்கள்... நாராயணசாமி கடும் விமர்சனம்!!
பாஜகவுக்கு சென்றால் கொலை செய்யப்படுவார்கள் என்று முன்னாள் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு சென்றால் கொலை செய்யப்படுவார்கள் என்று முன்னாள் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், வில்லியனூர் பகுதியில் கஞ்சா கொலை, கொள்ளை வழிப்பறி நகை பறிப்பு உள்ளிட்ட அனைத்து குற்றச்செயல்களும் நடந்து வருகிறது. வில்லியனூர் காவல் நிலையம் என்ற பெயர் பலகைகளை தூக்கி எறிந்து விட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யப்படும் என்று பெயர் பலகை வைக்க வேண்டும். இங்கு பணம் கொடுத்தால் தான் நீதி கிடைக்கும். கடந்த சில நாட்களுக்கு முன் செந்தில்குமரன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சாத்தியமில்லாதது... சீமான் கருத்து!!
இவர் காங்கிரஸ் கட்சியில் தான் வளர்ச்சி அடைந்தார். அப்போது அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. கடந்த தேர்தலில் அவர் காங்கிரஸ் கட்சியில் சீட்டு கேட்டார். அப்போது கூட்டணி தொடர்பாக அவருக்கு சீட்டு கொடுக்க முடியவில்லை. ஆகையால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். இன்று அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜகவுக்கு சென்றால் கண்டிப்பாக கொலை செய்யப்படுவார்கள். அமைச்சர் ஒருவர் மங்கலம் தொகுதியை குறி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: முதல் முறையாக டிவிட்டர் ஸ்பேஸில் பேசும் எடப்பாடி பழனிசாமி... உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்!!
இங்கு செந்தில்குமரன் செல்வாக்குடன் இருப்பதால் சீட்டு கேட்பார் அதனால் கூட கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று மக்கள் பேசுகின்றனர். ரவுடிகள் தான் பாஜகவில் இணைவார்கள் இதற்கு தலைவர் சாமிநாதன் தான். ஆகையால் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பாஜகவினரை பார்த்தால் தூர நில்லுங்கள். புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்றால் மங்கலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் வெற்றியடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.