பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சாத்தியமில்லாதது... சீமான் கருத்து!!
சாதி என்னும் மனநோயை அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் தடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சாதி என்னும் மனநோயை அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் தடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி மறுப்பு திருமணம் செய்வதன் மூலமும் சாதியை ஒழிக்க முடியும். கலப்புத் திருமணம் என்ற சொல் தவறானது, கலப்பு திருமணம் என்றால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் திருமணம் நடத்துவதை குறிக்கும். ஆனால் சாதி மறுப்பு திருமணம் என்ற சொல் தான் சரியானதாக இருக்கும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது சாத்தியமில்லாதது.
இதையும் படிங்க: முதல் முறையாக டிவிட்டர் ஸ்பேஸில் பேசும் எடப்பாடி பழனிசாமி... உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்!!
இன்று ஏழையாக இருப்பவன் நாளை பணக்காரனாக மாறலாம். ஆனால் இன்று தாழ்ந்த சாதியாக குறிப்பிடப்பட்டவன் சாகும்வரை அதே பெயராலே அழைக்கப்படுகிறான். இசைஞானி இளையராஜா இசையின் உச்சத்தில் இருந்தவர். அவருக்கு தேசிய விருது வழங்கும் போது கூட தலித் என அடையாளப்படுத்தி தான் வழங்கினார்கள். சாதி என்பது மனநோய் அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: From The India Gate: தெலுங்கானா தாமரை ஊறுகாயும் மம்தாவின் வாஷிங்மிஷின் காமெடியும்