From The India Gate: தெலுங்கானா தாமரை ஊறுகாயும் மம்தாவின் வாஷிங்மிஷின் காமெடியும்
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 20வது எபிசோட்.
மக்களுக்காக ஒருவர்
மலையாளத்தின் முன்னணி நடிகரான முன்னாள் எம்.பி. சமீபத்தில் காலமானார், அவர் எப்போதும் சந்தன கலரில் நீண்ட குர்தாவும் வேட்டியும் அணிந்து வலம் வருவார்.
மக்களவை உறுப்பினரான பிறகும் நகைச்சுவை அவருக்கு கவசமாக இருந்தது. 2014ஆம் ஆண்டு சாலக்குடி தொகுதியில் சிபிஎம் அவரை நிறுத்தியபோது, பலர் குமுறினார்கள். உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடிக்காத நகைச்சுவை நடிகருக்கு எம்.பி. பதவி கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் வெற்றி பெற்ற அவர் வாழ்க்கை அனுபவமுள்ள ஒருவர் எப்படி ஒரு நல்ல நாடாளுமன்றவாதியாக முடியும் என்பதைக் காட்டினார். புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்த அவர் தனது தொகுதி முழுவதும் முன்கூட்டியே புற்றுநோயைக் கண்டறியும் மையங்களையும் மற்றும் நோய்த்தடுப்பு மையங்களையும் நிறுவினார்.
அவர் அனைத்து அரசியல் மற்றும் மத வரம்புகளைக் கடந்து அவரது பெயர் அனைவரையும் சென்றடைந்தது. அவரது செயல்பாடு தனித்துவமானதாக இருந்தது. அவரது பதவிக்காலம் ஒரு சகாப்தமாக நினைவுகூரப்படும். அவர் அனைத்துக் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் அவர் அரசியல் பாடமாக இருப்பார். ஏனென்றால், எளிமையைத் தன் கொள்கையாகவும் புன்னகையைத் தன் பேச்சாகவும் பயன்படுத்தி மக்களுடன் இணையும் தலைவர்கள் அதிகம் இல்லை.
2 மணிநேரத்தில் பாலம் ரெடி! 3D பிரிண்டிங் மூலம் அசத்திய ஐஐடி சிவில் மாணவர்கள்!
நூற்றாண்டு விழா மேடையில்
மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டு தேசிய தலைவர்களால் ஈர்க்கப்பட்ட வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு ஒரு மாபெரும் மைல்கல். கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள சாலைகளைப் பயன்படுத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனுமதிக்கப்படவில்லை. அந்த உரிமைகளைப் பெறுவதற்கான சத்தியாக்கிரகத்தைத் தொடங்குவதற்கு முன் காந்திஜி வைக்கம் வந்தார்.
கேரளா மற்றும் தமிழக முதல்வர்கள் இருவரும் கூட்டாக விழாவில் கலந்துகொண்டர். காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தொடங்கி வைத்தார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களின் உரிமைகளை வழங்கிய ஒரு இயக்கத்தின் 100வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், காங்கிரஸ் கட்சி அந்த மேடையைப் ராகுல் காந்திக்கு ஆதரவைக் கோருவதற்காக பயன்படுத்தியுள்ளது. “ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக கவனக்குறைவாக கருத்து தெரிவித்ததற்காகவே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இந்த மேடையில் அதுபற்றிப் பேசுவதைத் தவிர்த்திருக்க வேண்டும்” என்று ஒருவர் கூறுகிறார்.
சத்தியாக்கிரகம் நடைபெற்ற 40 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் கட்சி உருவாக்கப்பட்டதால், அந்த இயக்கத்தின் மீது சிபிஎம் உரிமை கோர மேற்கொண்ட முயற்சி இன்னும் விசித்திரமானது.
இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்த வைக்கம் போராட்டம்: முதல்வர் மு. க. ஸ்டாலின் பேச்சு
விவாதத்தில் வேடம்
டிவி சகாப்தத்திற்குப்பின் நடக்கும் தேர்தல்களில் முக்கிய அம்சமாக ஆகிவிட்டது மும்முனை விவாதங்கள். அவற்றில் உள்ளூர் பிரச்சினைகள் முதல் தேசிய அளவிலான விவகாரங்கள் வரை விவாதிக்கப்படுகின்றன.
முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடும் ராமநகரா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற சமீபத்திய நிகழ்வு நினைவில் நிற்கக்கூடியது.
நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள், சுமார் 70 பாஜக தொண்டர்கள் மற்றும் நான்கு ஜேடிஎஸ் தொண்டர்கள் இந்த அனல் பறக்கும் விவாதத்தில் பங்கேற்றனர். விவாத நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சிறிது நேரம் காத்திருந்தாலும், புதிய ஜேடிஎஸ் தொண்டர்கள் யாரும் வரவில்லை.
இதனால் நிகழ்ச்சியைப் பார்க்க அங்கு வந்திருந்த மூன்று பத்திரிகையாளர்கள் ஜேடிஎஸ் தொண்டர்கள் என்ற பெயரில் நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். விவாதம் தொடங்கிய சில நிமிடங்களில், ஜேடிஎஸ் தலைவர் ஹெச் .டி. குமாரசாமியின் பஞ்சரத்ன யாத்திரையைக் குறிப்பிட்டு, காங்கிரஸ், பாஜகவை போல கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாங்கள் மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தரப்பினர், ஜேடிஎஸ் தொடர்கள் வேடத்தில் இருப்பவர்கள் மூன்று பேர் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே அல்ல, பத்திரிகையாளர்கள் எனக் கூறினர். இதனால் அவர்கள் விவாதத்தில் இருந்து விலகினர். இதனால் ஜேடிஎஸ் அணி காலியானது.
ஜேடிஎஸ் கட்சியினர் எம்எல்ஏக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இதைத்தான் செய்வார்கள் என்று காங்கிரஸ் கட்சியினர் கிண்டல் செய்தனர். இருந்த ஒரே ஒரு ஜேடிஎஸ் தலைவர் அவர்கள் மூவரும் பத்திரிகையாளர்கள் என்றும் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் ஒப்புக்கொண்டார். “தேர்தல் காலத்தில் பத்திரிகையாளர்கள் இப்படி செய்கிறார்களே” என்று இன்னொருவர் குறை கூறினார்.
வெப்சைட் மூலம் 67 கோடி பேரின் தகவல்களைத் திருடி விற்ற சைபர் திருடன் கைது
தாமரை ஊறுகாய்
தெலுங்கானா ஊறுகாய் உலகப் பிரசித்தி பெற்றது. இப்போது அதன் அரசியல் நகர்வுகளும் காரசாரமாக இருந்துவருகிறன்றன.
அந்த மாநில பாஜகவில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் கட்சியின் தேசியத் தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன.
பாரதிய ஜனதா கட்சியில் புதிதாக நுழைந்த, மூத்த அரசியல்வாதி ஈடலா ராஜேந்தர்தான் அதற்குக் காரணம்.
ராஜேந்தர் பாஜகவில் சேர்வதற்காக அப்போதைய டிஆர்எஸ் (இப்போது பிஆர்எஸ்) கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். பின்னர் ஹுசூராபாத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால், தனது ஆதரவாளர்களுக்கு சீட் கொடுப்பது உள்ளிட்ட சில வாக்குறுதிகளை கட்சி அவருக்கு நிறைவேற்றித் தராததால், அவர் கட்சியில் தன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.
இதுபற்றி பாஜக தலைவர் ஜேபி நட்டாவிடம் சொல்லி இருக்கிறார். நட்டா, திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ராஜேந்தரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், ராஜேந்தருக்கு நட்டாவின் பதிலில் மகிழ்ச்சி இல்லை. அடுத்த முயற்சிக்குத் தயாராகி வருகிறார்.
முனுகோடு இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததன் மூலம் பாஜக அரசியலில் முன்னேற்றத்தை இழக்கத் தொடங்கியது. அதன்பிறகு பெரிய தலைவர்கள் யாரும் பாஜகவில் சேரவில்லை. இச்சூழலில் மூத்த தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி அக்கட்சிக்கு தலைவலியாக மாறியுள்ளது. கட்சியில் ஏற்பட்டுள்ள அனைத்து அதிருப்திக்கும் மாநில தலைவர் பாண்டி சஞ்சய் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை விரைவில் கவனிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
2030க்குள் மனிதர்களின் மரணத்தைத் தடுக்கும் நானோ ரோபா! முன்னாள் கூகுள் விஞ்ஞானி குர்ஸ்வேல் தகவல்
வாஷிங் மிஷின் பிரச்சாரம்
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி வாஷிங் மிஷினுடன் வந்து மோடி அரசை வீழ்த்துவோம் என்று மிரட்டியது நகைச்சுவை ஆகிவிட்டது.
விலைவாசி உயர்வு மற்றும் எதிர்க்கட்சிகளை ஒடுக்குதல் ஆகியவற்றுக்காக மத்திய அரசை மம்தா குற்றம் சாட்டுகிறார். ஆனால், இதே காரணங்களுக்காக சொந்த மாநிலத்தில் அவருக்கு எதிராகவே போராட்டம் நடந்துவருகிறது.
பாஜக தலைவர்கள் சுவேந்து அதிகாரி, சுகந்த் மஜூம்டர் ஆகியோர் மம்தாவுக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இடதுசாரிக் கட்சிகளின் நிலை பரிதாபத்துக்குரியது. அவர்கள் மோடி மற்றும் மம்தா ஆகிய இரண்டு தரப்பையும் எதிர்க்க வேண்டும். யாருடன் சண்டையிடுவது என்று முடிவு செய்யவேண்டியது எதிர்க்கட்சியின் பாடு!

எரிமலையின் உச்சியில் ஒரு மாதம்! உலக சாதனை படைக்கும் மெக்ஸிகோ இளம்பெண்!