அந்த இருவரையும் நான் இணைப்பேன்.. அதிமுகவை அழிக்க முடியாது - சபதம் போட்ட சசிகலா.!

‘எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் படித்தவள் சொல்கிறேன், வீர தமிழச்சியாக சொல்கிறேன், நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது’ என்று கூறியுள்ளார் சசிகலா.

VK Sasikala speech about aiadmk eps and ops at divkaran party join function

கடந்த 2018-ம் ஆண்டு சசிகலா சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார்.ஆனால், அக்கட்சியில் தனது பெயரையோ,படத்தையோ பயன்படுத்தக்கூடாது என சசிகலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.இதைத்தொடர்ந்து,சசிகலா இனி தனது சகோதரி இல்லை’ என திவாகரன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சசிகலாவின் அண்ணன் திவாகரன் தனது அண்ணா திராவிட கழகத்தை சசிகலாவுடன் இணைப்பதாக நேற்று அறிவித்தார். அதன்படி, திவாகரனின் கட்சி இணைப்பு விழா தஞ்சையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலாவின் கட்சியுடன், திவாகரன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைத்து கொண்டார்.

VK Sasikala speech about aiadmk eps and ops at divkaran party join function

விழாவில் பேசிய சசிகலா, ‘இன்று அண்ணா திராவிடர் கழகம் இணைந்துள்ளது. இதேபோல் பிரிந்து செயல்படும் அனைவரையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் மிக பெரிய கட்சி நம் கட்சி என்று உருவாக்கும் வரை நான் ஓயமாட்டேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் படித்தவள் சொல்கிறேன், வீர தமிழச்சியாக சொல்கிறேன், நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது. 

மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!

திமுக எத்தனை கணக்கு போட்டாலும் அது பலிக்காது. அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, விதிவசத்தால் நான் சிறைக்கு சென்றேன். இதனால் கட்டுக்கோப்பாக இருந்த நமது கழகம் எதிரிகளின் ஆசைப்படி சிதறி போனது. எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் எத்தனையோ பேர் கட்சியை விட்டு போனாலும், கழகத்தின் வளர்ச்சிக்காக மீண்டும் அவர்களை இணைத்துள்ளோம்.

பிரிந்தவர்களை,  கட்சியை எப்படி சேர்ப்பது என்ற கலையை நான் தெளிவாக கற்றுக் கொண்டு விட்டேன். இரு அணிகளாக பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைத்து அவர்கள் நம் கட்சிக்காரர்கள் என்று பார்ப்போமே தவிர அவர் அந்த அணியை சேர்ந்தவர், அவர் இந்த அணியை சேர்ந்தவர் என்று என்றுமே நினைக்கவில்லை.

VK Sasikala speech about aiadmk eps and ops at divkaran party join function

தற்போது நடந்த நிகழ்வு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இரு பெரும் தலைவர்களும் இதனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள். ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவதா ? சில சுயநலவாதிகள், தாங்கள் இருக்கும் இயக்கம் எப்பேர்ப்பட்ட இயக்கம். எப்படிப்பட்ட தலைவர்கள் கொண்ட இயக்கம்.

மேலும் செய்திகளுக்கு.. அடுத்த பிளான் ரெடி.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார் கமல்ஹாசன்.! எதற்கு தெரியுமா?

நம் தலைவர்கள் பட்ட கஷ்டம் என்ன அவர்கள் செய்த தியாகங்கள் என்ன, எத்தனை கழக தொண்டர்கள் தங்கள் இன்னுயிர்களை தந்துள்ளார்கள் என்று சிந்திக்காமல் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, நான் பெரியவன், நீ பெரியவன் என்று போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவது எந்த விதத்தில் நியாயம் ? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகளுக்கு.. அதிமுக கட்சிக்கு இத்தனை கோடி சொத்து? எப்படி இருந்த கட்சி.. குமுறும் அதிமுக தொண்டர்கள்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios