வெற்றிமாறன் பெரியாரின் பேரன்.. ராஜராஜன் விஷயத்தில் பாஜகவினரை பந்தாடிய திருமாவளவன்.
வெற்றிமாறன் பெரியாரின் பேரன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழரான ராஜராஜனை இந்து மன்னனாக அடையாளப்படுத்த சதி நடக்கிறது என்ற வெற்றிமாறன் பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வெற்றிமாறனை திருமாவளவன் இவ்வாறு
வெற்றிமாறன் பெரியாரின் பேரன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழரான ராஜராஜனை இந்து மன்னனாக அடையாளப்படுத்த சதி நடக்கிறது என்ற வெற்றிமாறன் பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வெற்றிமாறனை திருமாவளவன் இவ்வாறு பாராட்டியுள்ளார்.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனின் 60வது பிறந்தநாளையொட்டி குறும்பட ஆவணப்பட கலைத் திருவிழா நடைபெற்றது. அதில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் திரைத்துறையை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு மதசார்பற்ற மாநிலமாக உள்ளது. ஒரு சாராரிடம் இருந்த திரைத்துறையை திராவிட இயக்கம் பொதுமைப்படுத்தியது. அதனால்தான் இன்று வெளிப்புற ஆதிக்கம் தமிழகத்தில் ஊடுருவாமல் இருக்கும் பக்குவத்தை இந்த மாநிலம் பெற்றிருக்கிறது.
இதையும் படியுங்கள்: பின்தங்கியுள்ள தென்மாவட்டங்ளின் வளர்ச்சிக்கு அரசுக்கு நடவடிக்கை எடுக்கமா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி
சினிமா என்பது வெகுஜன மக்களை எளிதில் சென்றடையும் ஒரு கலை வடிவம், எனவே சினிமாவையும் அரசியல் மயப்படுத்துவதை அவசியம், திராவிட இயக்கம் அந்த கலையை சரியான பயன்படுத்தியது. மக்களையும் பிரதிபலிப்பது தான் கலை என்றது, எனவே கலையை நாம் சரியாக கையாள வேண்டும். தமிழ் மன்னன் ராஜராஜனை இந்து அரசனாக காட்டுவது, திருவள்ளுவருக்கு காவியுடை அணிவிப்பது போன்ற செயல்களை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என பேசினார். அவரின் இந்த பேச்சு பாஜகவினரை கொந்தளிப்பு அடைய வைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு எதிரானதுதான் திராவிட மாடல்.. மாஸ் காட்டிய தமிழக முதல்வர்.
வெற்றிமாறனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சிவபெருமானை இந்து இல்லை என்று சொல்வதற்கான தைரியத்தை யார் கொடுத்தது. இந்துக்களுக்கு எதிரான வன்மத்தை வெற்றிமாறன் வெளிப்படுத்தியுள்ளார், உலகம் வியக்கும் அளவிற்கு சிவபெருமானுக்கு தஞ்சையில் பெரிய கோயில் கட்டியவர் ராஜராஜன், அந்நிய மதங்களை இந்த மண்ணில் புகுத்த, இந்து மதத்தை அழிக்க பல ஆண்டுகளாக சதி நடந்து வருகிறது, அதை தான் வெற்றிமாறனின் பேச்சு காட்டுகிறது என்றார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வெற்றிமாறனுக்கு ஆதரவாக கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள விவரம் பின்வருமாறு:- 1000 ஆண்டுகளுக்கு முன்பு லிங்கத்திற்கு பெரிய கோயில் கட்டியதால் அவர்மீது இன்று அடையாளத்தை திணிப்பது சரியா, இது வரலாற்று திரிபு ஆகாதா? இதை தானே வெற்றிமாறன் கூறினார். வெற்றிமாறன் பெரியாரின் பேரன் என பதிவிட்டுள்ளார்.
மேலும், ராஜராஜசோழன் காலத்தில் சைவம் வேறு, வைணவம் வேறு, திருநீறு பட்டை வேறு, திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன, குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன, மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன, தற்காலத்தில் ஏது இந்து மதம். இக்காலத்தில் லிங்காயத்துகள் தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர், போராடவும் செய்கின்றனர். இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்கு பெரும் கோயில் கட்டியதால் அவர் மீது இன்று அடையாளங்களை திணிப்பது சரியா, இது வரலாற்று திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் வெற்றிமாறன் அவர் பெரியாரின் பேரன். என அவர் பதிவிட்டுள்ளார்