பின்தங்கியுள்ள தென்மாவட்டங்ளின் வளர்ச்சிக்கு அரசுக்கு நடவடிக்கை எடுக்கமா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி
திருநெல்வேலி, மதுரை உட்பட தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்று தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி குறித்து நீண்ட விவாதம் நடைபெற்று வருகிறது. நிலம், தண்ணீர், மின்சாரம் தேவையான அளவில் இருந்தால் கூட தொழில் தொடங்க தயக்கம் காட்டப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தென் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களை அதிக அளவில் உருவாக்கினார், அதன் மூலம் தேவையான அளவில் தொழில் நிறுவனங்களுக்கு மனித வளத்தை உருவாக்க வாய்ப்பு அமைந்தது .
தென் மாவட்டத்தில் உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல்,ராமநாதபுரம், சிவகங்கை ,நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களை இணைத்து மண்டலமாக உருவாக்கப்பட்டது. மதுரை, தூத்துக்குடி சாலை பொருளாதார சாலையாக உருவாக்கப்பட்டது, அதேபோல் தொழில் தொடங்க மானியம், வட்டியில்லா கடன், அரசு நிலம் ஆகியவை வழங்கப்பட்டது.
தொழில் நிறுவனங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் இருந்தன. அதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் முதலீட்டை ஈர்க்க அம்மாவின் வழியில் எடப்பாடியார் தனி கவனம் செலுத்தினார். அதனை தொடர்ந்து மதுரையில் சர்வதேச விமான நிலைய அமைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தார். மேலூர், கப்பலூர் வரை உள்ள 27 கிலோமீட்டர் சுற்றுசாலையை விரிவு படுத்தினார். சுற்று சாலையை எதிர் திசையில் உள்ள வாடிப்பட்டி மேலூரில் உள்ள அரை வட்ட சாலையை எடப்பாடியார் காலத்தில் கொண்டு வரப்பட்டு, தற்போது இந்த சாலையில் எல்லாம் முழு வட்ட வடிவமாக இப்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு எதிரானதுதான் திராவிட மாடல்.. மாஸ் காட்டிய தமிழக முதல்வர்.
அதேபோல் நத்தம் சாலையில்1000 கோடியில் பறக்கும் பாலம் நடைபெற்று வருகிறது, இந்த சாலை துவரங்குறிச்சியில் இணையும். அதேபோல் மேலூர் காரைக்குடியில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் தென் மாவட்டத்தில் தொழில் தொடங்க பல்வேறு கட்டமைப்புகளை எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை போன்ற நகரங்களில் பெரும் தொழிற்சாலைகள் உருவாகி வருகிறது. திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற நகரங்களில் சிறுகுறு நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்று திமுக அரசு கூறியது, தற்போது செயல்படுத்தப்படுமா?
அதே போல் மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளனர், ஏற்கனவே இரண்டு பூங்காக்கள் உள்ளன அது இன்னமும் முழுமையாகப்படவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.? ஆகவே தென் மாவட்டங்களில் தொழில் முனைவோர்களுக்கு அம்மா அரசு போல் திமுக அரசு நடவடிக்கை முன் வருமா? தொழில் பேட்டை தொடங்க நிலம் உள்ளது அரசு அதனை முறையாக பயன்படுத்தி தொடங்க வேண்டும்.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்
தென் மாவட்டத்தில் தொழில் முதலீட்டுட்டை ஈர்க்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது, ஆகவே அரசு உரிய திட்டத்தை செயல்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், குறிப்பாக சட்ட ஒழுங்கை சீர்படுத்த அரசு முன்னு வருமா? தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்க சாலை வசதி, மேம்பால வசதி, கட்டமைப்பு வசதி,நிலம் வசதி மானியம், வட்டியில்லாகடன் ஆகியவற்றை எடப்பாடியார் ஆட்சியில் வழங்கியது போல தற்போது திமுக அரசு முன்மாதிரி எடுத்துக் கொண்டு விரைவு படுத்துமா?
கடந்த ஒன்னரை ஆண்டு காலம் மதுரை ,தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ,விருதுநகர், தூத்துக்குடி கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஒரு சிறு தொழிற்சாலையோ, பெரும் தொழிற்சாலையோ உருவாக்கியதாக அடையாளம் தெரியவில்லை, ஆகவே பின் தங்கிய மாவட்டங்களுக்கு திமுக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.