வெற்றிமாறனின் பார்வை சரியில்லை..சோழன் குறித்த விமர்சனத்திற்கும் கண்டனம் தெரிவித்த குஷ்பு

எல்லாத்திலேயும் தப்பு கண்டுபிடிக்கணும், என்னோட நோக்கத்துல மட்டும் தான் பார்ப்பேன் என்று அவர் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என சாடி உள்ளார் குஷ்பு.

Kushboo condemned about Vetrimaran criticism of ponniyin selvan

மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சோழ வம்ச வரலாறான பொன்னியின் செல்வனை படமாக்கி உள்ள இயக்குனர். அதனை சரியான விதத்தில் ரசிகர்களுக்கு சமர்ப்பித்துள்ளதாக பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றன. இதில் நடித்துள்ள விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை பக்காவாக பிரதிபலிப்பதாகவும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Kushboo condemned about Vetrimaran criticism of ponniyin selvan

அதோடு சில நாட்களிலேயே ரூ.200 கோடிகளுக்கு மேல் வசூலையும் குவித்துவிட்டது இந்த படம். இருந்தும் படம் குறித்த மோசமான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளன. முன்னதாக ராஜராஜ சோழன் சாமியே கும்பிட மாட்டார் எனும் கருத்து நிலவியது. இந்நிலையில்  ராஜராஜ சோழனை இந்து அரசனாக சித்தரித்து உள்ளனர் என வெற்றிமாறன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை ஒட்டி, சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்படம் மற்றும் ஆவணப்பட கலை திருவிழாவில் நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் சினிமாவை திராவிட இயக்கங்கள் கைப்பற்றியதன் விளைவு தான் தமிழ்நாடு இன்றளவும்  மதசார்பற்ற மாநிலமாகவும், பல வெளிப்புற காரணிகள் ஊடுருவ முடியாத பக்குவத்தோடும்  இருக்கிறது.

Kushboo condemned about Vetrimaran criticism of ponniyin selvan

சினிமாவை அரசியல் மையமாக்குவது மிக முக்கியம். நடுவில் சில காலம் அது எடுபடாமல் போய்விட்டது. சினிமா என்னும் கலையை சரியாக நாம் கையாள வேண்டும். அப்படி கையாள தவறும் போது தான் நம்முடைய அடையாளம் நம்மிடமிருந்து  எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளுவருக்கு காவி உடை, ராஜராஜ சோழனை இந்து அரசனாக சித்தரித்தல் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.என பேசியிருந்தார். இது குறித்து  பல விமர்சனங்களும் எழுந்தன.

Kushboo condemned about Vetrimaran criticism of ponniyin selvan

இந்நிலையில் பிரபல நடிகையும், பாஜக செய்து தொடர்பாளருமான குஷ்பூ, இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும் உலகம் எந்த பார்வையில் பார்க்கிறதோ, அதையே பார்க்க வேண்டும். எல்லாத்திலேயும் தப்பு கண்டுபிடிக்கணும், என்னோட நோக்கத்துல மட்டும் தான் பார்ப்பேன் என்று அவர் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என சாடி உள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios