Asianet News TamilAsianet News Tamil

ஹீரோ அடிவாங்கிக்கொண்டே இருப்பதை போல் தான் இருக்கும், கடைசியில் ஒரே அடியில் வில்லனை வீழ்த்துவார்-வைத்தியலிங்கம்

சினிமாவில் வில்லனிடம் தொடர்ந்து அடிவாங்கும் கதாநாயகன், கடைசியில் ஒரே அடியில் வில்லனை வீழ்த்துவதை போல, ஓ.பன்னீர்செல்வம் ஒரே அடியில் எதிரிகளை வீழ்த்துவார் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

vaithilingam said that OPS will meet Sasikala soon KAK
Author
First Published Nov 9, 2023, 2:22 PM IST | Last Updated Nov 9, 2023, 2:22 PM IST

அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதல் காரணமாக பல்வேறு பிரிவுகளாக அதிமுக பிளவுபட்டுள்ளது. கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும், பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இருந்து போதும் தான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் கூறிவந்தார். மேலும் அதிமுக பெயரில் அறிக்கையும் வெளியிட்டார். 

vaithilingam said that OPS will meet Sasikala soon KAK

ஓபிஎஸ் அவசர ஆலோசனை

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி முறையிட்டார். இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு முறையீடு செய்துள்ள சூழலில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், ஓ.பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வந்தவர்கள், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அதிமுக கொடிகளை கார்களில் பயன்படுத்தவில்லை. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வத்திற் ஆதரவாளர்  முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்த்தித போது, நீதிமன்றத்தில் தங்கள் அணிக்கு தொடரந்து பின்னடைவாக இருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், 

vaithilingam said that OPS will meet Sasikala soon KAK

ஓபிஎஸ் ஒரே அடியில் வீழ்த்துவார்

ஹீரோ வில்லனிடம் அடிவாங்கிக்கொண்டே இருப்பார். கடைசியில் ஹீரோ ஒரே அடியில் வில்லனை வீழ்த்துவார். அதை போல கடைசியில் ஓ.பி.எஸ் வீழ்த்துவார் என பதிலளித்தார். தாங்கள் கட்சி வேட்டி கட்டுவதை யாரும் தடுக்க முடியாது எனவும், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க கார்களில் கொடி ஏற்றவில்லை என கூறினார். அதிமுக நன்றாக இருக்க வேண்டும், தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைபாடாக உள்ளதாக கூறிய அவர்,

தேர்தல் நெருங்கும் போது ஓ.பி.எஸ் சசிகலாவை சந்திப்பார் என தெரிவித்தார். அவரை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி, நீதிமன்ற உத்தரவால் மக்கள் மன்றத்தில் ஓ.பி.எஸ்க்கு அனுதாபம் ஏற்பட்டுள்ளது. அது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியாக மாறும் என தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios