திமுக பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். 98 வயதான அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அன்பழகன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அன்பழகனுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அன்பழகன் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளித்தனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கவலைக்கிடமாக இருந்த அன்பழகன் இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த கட்சியினரும் கடும் சோகத்தில் இருக்கின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பழகனின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக பொதுச்செயலாருக்கு அஞ்சலி செலுத்த அதிமுகவினரோடு வந்த ஓ.பி.எஸ்..!

 

திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், 'இடியின் குரல், மின்னலின் வேகம், தீயின் தீவிரம், புயலின் உரையாடல் அனைத்தும்கொண்ட பெரும் பேச்சாளர் #பேராசிரியர்  பேசுவதை நிறுத்திக்கொண்டார். இனி எப்போது கேட்போம் அந்த இனமானத் தமிழை'? என தனது ட்விட்டர் பதிவில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

பெரியப்பாவும் மறைந்து விட்டார்.. என்ன சொல்லி தேற்றிக்கொள்வேன்..? கண்ணீருடன் கலங்கிய ஸ்டாலின்..!