திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 98 வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் காலனமானார். அவரது மறைவு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்பழகன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அன்பழகன் உடலுக்கு ஏராளமானோர் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், அன்பழகனின் வீட்டிற்கு நேரில் வந்து அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் வந்தனர். முன்னதாக அதிமுக சார்பாக வெளியிடப்பட்ட இரங்கல் குறிப்பில், 75 ஆண்டுகள் பொதுவாழ்வில் பங்கு பெற்று அயராது உழைத்து விடைபெற்றுச் சென்றிருக்கும் பேராசிரியர் அன்பழகனின் மறைவு, தமிழக அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருணாநிதி-அன்பழகன்..! இறப்பிலும் இணை பிரியாத உயிர்த் தோழர்கள்..!

அன்பழகனின் மறைவையொட்டி திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் 1 வார காலத்திற்கு ரத்து செய்யப்படுவதாகவும் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அன்பழகன் உடல் இன்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வேலக்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது.

'அவர் சம்பாதித்தது மதிப்பும் மரியாதையும் தான்'..! அன்பழகனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி..!