Asianet News TamilAsianet News Tamil

நெல்லைக்கு பழைய Hockey Turf-ஐ அனுப்பியது ஏன்..? புதியது கேட்ட நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி

புதியது தான் வேண்டுமெனில் சென்னையிலுருந்து அனுப்பப்பட்ட Hockey Turf-ஐ தேவையுள்ள வேறு மாவட்டத்துக்கு வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள உதயநிதி, புதிய  Turf அமைக்க ரூ.4 கோடி வரை செலவாகும் எனவும் இதனை  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நயினார் நாகேந்திரன் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Udayanidhi has explained why he sent the old Hockey Turf to Nellai
Author
First Published Jul 16, 2023, 7:21 AM IST

 நெல்லைக்கு பழைய ஹாக்கி டர்ஃப்

பாளையங்கோட்டை  அண்ணா விளையாட்டு  மைதானத்திற்கு பழைய ஹாக்கி டர்ஃப் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் டுவிட்டரில் உதயநிதிக்கு புகார் தெரிவித் நிலையில் அதற்கு உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பதிவில்,  மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கவனத்திற்கு பாளையங்கோட்டை  அண்ணா விளையாட்டு  மைதானத்திற்கு சென்னையில் இருந்து மிகவும் பழைய ஹாக்கி டர்ஃப்(Hockey turf)அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

 

பழைய பழைய ஹாக்கி டர்ஃப் அனுப்பியது ஏன்.?

இதை அமைப்பதற்கான  செலவே மிகவும் அதிகம் எனவே புதிய  ஹாக்கி டர்ஃப் (Hockey Turf) அனுப்பி வைத்து அதனை அமைக்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த அமைச்ச்ர் உதயநிதி, அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு வணக்கம், சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சர்வதேச ஹாக்கி போட்டியாக, ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கவுள்ளது.

Udayanidhi has explained why he sent the old Hockey Turf to Nellai

இதற்காக எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை கழக அரசு ரூ.15 கோடி செலவில் புனரமைத்து வருகிறது. சர்வதேச அளவிலான இப்போட்டிக்காக புதிய Hockey Turf–ஐ அமைக்கவுள்ளோம். மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட Turf, தேசிய அளவிலான போட்டிகள் & பயிற்சிக்காக இன்னும் 7 ஆண்டுகள் வரை பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. 

 

புதிய ஹாக்கி டர்ஃப்க்கு நிதி ஒதுக்கிடுக

ஆகவே, அந்த Hockey Turf வேண்டுமென்று தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்தனர். விளையாட்டு வீரர்கள் அதிகம் நிரம்பிய பாளையங்கோட்டை பகுதியிலிருந்தும் அத்தகைய கோரிக்கை வந்தது. எனவே, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையிலிருந்த Hockey Turf-ஐ வழங்கினோம். புதியது தான் வேண்டுமெனில் சென்னையிலுருந்து அனுப்பப்பட்ட Hockey Turf-ஐ தேவையுள்ள வேறு மாவட்டத்துக்கு வழங்க தயாராகவுள்ளோம். அதே நேரத்தில், பாளையங்கோட்டையில் புதிய Turf அமைக்க ரூ.4 கோடி வரை செலவாகும்.  அண்ணன் நாகேந்திரன் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை வழங்கினால், மீதி தொகையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நிச்சயம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

இதையும் படியுங்கள்

பிரதமர் சொன்னதை இந்தி தெரிந்தவர்களிடம் கேட்டு உதயநிதி தெரிந்துகொள்ள வேண்டும் - வானதி சீனிவாசன் கருத்து

Follow Us:
Download App:
  • android
  • ios