நேற்று முதலே, தொண்டர்கள் ராம்ப் வால்க் செய்யும் மேடை அருகே திரண்டு உள்ளனர். முதல் நாள் இரவே வந்து இடம் பிடித்து படுத்திருந்தனர். ஆனால், விஜய் வந்ததை பார்த்த உடன் மக்கள் கொத்துக் கொத்தாக கிளம்பிச் சென்று வருகின்றனர்.
மதுரை, பாரபத்தியில் தவெக 2வது மாநில மாநாடு இப்போது நடந்து வருகிறது. இம்மாநாட்டில் விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா ஆகியோரும் கலந்து கொண்டனர். 3:45 மணியளவில் மேடைக்கு வந்த விஜய்யை நிர்வாகிகள் ககொடுத்து வரவேற்றனர். மேடையில் இருந்த சந்திரசேகர் விஜய்யை கட்டியணைத்து வரவேற்றனர். பிறகு தொண்டர்களை நோக்கி, விஜய் கையசைத்தும், கும்பிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
2500 பவுன்சர்கள் மாநாட்டு பாதுகாப்பு பணிகளில், 3500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பவுன்சர்கள் மாநாட்டு திடலுக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்களை கண்காணிப்பதற்கென 500 பெண் பவுன்சர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இதுவரை எந்தக் கட்சி மாநாட்டிலும் பெண்களை கண்காணிக்க தனியாக பவுன்சர்களை ஈடுபடுத்தியதில்லை. விஜய் மட்டுமே மதுரை மாநாட்டில் இந்த பெண் பவுன்சர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.

மாநாட்டு அரங்கிற்குள் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அமரும் இருபுறத்திலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் 600 டாக்டர்கள் தயாராக உள்ளனர். 45 மினி, பெரிய ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.
நிகழ்ச்சி முடியும் இரவு 7:00 மணிக்கு பின்பே வெளியேற முடியும் என்பதால் பிஸ்கெட், அரைலிட்டர் குடிநீர் பாட்டில், மிக்சர், குளுக்கோஸ் டப்பா என இரண்டு லட்சம் பைகள் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டன. நேற்று முதலே, தொண்டர்கள் ராம்ப் வால்க் செய்யும் மேடை அருகே திரண்டு உள்ளனர். முதல் நாள் இரவே வந்து இடம் பிடித்து படுத்திருந்தனர். ஆனால், விஜய் வந்ததை பார்த்த உடன் மக்கள் கொத்துக் கொத்தாக கிளம்பிச் சென்று வருகின்றனர். இது மாநாட்டை ஏற்பாடு செய்த தவெகவினருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
