கர்நாடகாவின் விருந்தோம்பலில் மகிழ்ந்த ஸ்டாலினுக்கு, டெல்டா பாசன விவசாயிகளின் நிலை பற்றி கவலை இல்லையா.?- டிடிவி

குறுவை சாகுபடிப் பயிர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று டெல்டா விவசாயிகள் தவிப்பது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கூட்டணி விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பியிருக்கும் திமுக தலைவர், தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துள்ளதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
 

TTV Dhinakaran has questioned why Chief Minister Stalin did not demand that water should be released from Cauvery to Tamil Nadu

காவிரியில் தண்ணீர் திறப்பு

எதிர்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள பெங்களூர் சென்றிருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசிடம் கோரிக்கை விடுக்காததற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  எதிர் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் இருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டாவில் நெற்பயிர்களை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகா அரசிடம் எந்தவித கோரிக்கையும் விடுக்காமல் திரும்பியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

TTV Dhinakaran has questioned why Chief Minister Stalin did not demand that water should be released from Cauvery to Tamil Nadu

விவசாயிகளின் நிலை பற்றி கவலை இல்லையா?

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தபோதிலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் அடம்பிடிக்கும், கர்நாடகாவின் விருந்தோம்பலில் மகிழ்ந்த திமுக தலைவருக்கு, டெல்டா பாசன விவசாயிகளின் நிலை பற்றி கவலை இல்லையா? டெல்லி சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தந்தால் மட்டுமே கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவேன் என டெல்லி முதலமைச்சர் சொந்த மாநிலத்தின் நலனுக்காக குரல் கொடுத்ததைப் போல திமுக தலைவர் குரல் கொடுக்கத் தவறியது ஏன்? எப்போதுமே தமிழ்நாட்டின் மக்களின் நலனை புறந்தள்ளிவிட்டு சொந்த நலனுக்காகவே சிந்திக்கும் திமுக தலைவர், 

TTV Dhinakaran has questioned why Chief Minister Stalin did not demand that water should be released from Cauvery to Tamil Nadu

தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிவாரா? பெங்களூரு விமானநிலையத்துக்கே வந்து தன்னை வரவேற்ற துணைமுதலமைச்சரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமாரிடம் மரியாதை நிமித்தமாகவாவது காவிரியில் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கோரிக்கைவைக்கத் தவறியது ஏன் ? குறுவை சாகுபடிப் பயிர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று டெல்டா விவசாயிகள் தவிப்பது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கூட்டணி விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பியிருக்கும் திமுக தலைவர், தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவது கண்டிக்கத்தக்கது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி.! 330 தொகுதிகளில் வெற்றி- அடித்து கூறிய இபிஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios