Asianet News TamilAsianet News Tamil

மனு கொடுக்க வந்த பெண்ணை தலையில் அடிச்சு விரட்டுவீங்களா அமைச்சரே? இதுதான் உங்க திராவிட மாடலா? கொதிக்கும் TTV.!

கோரிக்கையை நிறைவேற்றித்தரக் கேட்டு மனு கொடுத்த பெண்ணை, தமிழக வருவாய் துறை அமைச்சர் தலையில் அடித்து விரட்ட முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

TTV. Dhinakaran condemns Minister KKSS Ramachandran
Author
Virudhunagar, First Published Jul 13, 2022, 1:38 PM IST

கோரிக்கையை நிறைவேற்றித்தரக் கேட்டு மனு கொடுத்த பெண்ணை, தமிழக வருவாய் துறை அமைச்சர் தலையில் அடித்து விரட்ட முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் இலவச ஆடு வழங்கும் திட்ட நிகழ்ச்சியில் வருவாய்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த கலாவதி என்ற பெண் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் மனு அளிக்க வந்தார்.

இதையும் படிங்க;- மனு கொடுத்த பெண்ணை தலையில் தாக்கிய தமிழக அமைச்சர்...!பதவி விலக கெடு விதித்த அண்ணாமலை

 TTV. Dhinakaran condemns Minister KKSS Ramachandran

அந்த மனுவில் தனது குடும்பம் கஷ்டத்தில் உள்ளதாகவும் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என தெரிவித்து இருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த மனுவை வாங்கி பார்த்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அந்த மனுவால் அப்பெண்ணின் தலையில் அடித்தார். இந்த வீடியோ காட்சி வைரலானது.  இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கட்டணம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளை சாதிப் பெயர் சொல்லித் திட்டுவதும், மனு கொடுக்க வந்தவர்களை தலையில் அடித்தி விரட்டுவதும்தான் திராவிட மாடலா என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

TTV. Dhinakaran condemns Minister KKSS Ramachandran

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கோரிக்கையை நிறைவேற்றித்தரக் கேட்டு மனு கொடுத்த பெண்ணை, தமிழக வருவாய் துறை அமைச்சர் தலையில் அடித்துவிரட்ட முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அந்தக் காணொளியை பார்த்தபோது, ஓர் அமைச்சரே இப்படி நடந்து கொண்டால் மக்கள் எப்படி முன்வந்து ஆட்சியாளர்களிடம் குறைகளைத் தெரிவிப்பார்கள்?

 

திமுக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளை சாதிப் பெயர் சொல்லித் திட்டுவதும், மனு கொடுக்க வந்தவர்களை தலையில் அடித்தி விரட்டுவதும்தான் மேடைக்கு மேடை திரு.ஸ்டாலின் முழங்கி வரும் திராவிட மாடல் போலும்!?" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க;-  ராஜபக்சேக்கு வந்த நிலைமைதான் எடப்பாடியாருக்கும் வரும்.. டிடிவி.தினகரன் சரவெடி.!

Follow Us:
Download App:
  • android
  • ios