ராஜபக்சேக்கு வந்த நிலைமைதான் எடப்பாடியாருக்கும் வரும்.. டிடிவி.தினகரன் சரவெடி.!

பொதுக்குழு உறுப்பினர்களை யார் வேண்டுமானாலும் வசப்படுத்திவிடலாம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்துவிட முடியும். 

Edappadi Palaniswami will be kicked out like Rajapaksa... TTV.Dhinakaran

பெரும் பொருள் செலவில் பிரமாண்டமாக செலவு செய்து பொதுக்குழுவை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்து கொண்டுள்ளார் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வினை விதைத்தவர் வினை அறுக்க வேண்டும் என்பதுதான் நீதி. ஜாதி மத பேதமில்லாத அதிமுகவில் ஜாதி மத அரசியல் செய்து எல்லோரையும் தன் வசப்படுத்துவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம். பெரும் பொருள் செலவில் பிரமாண்ட செலவு செய்து பொதுக்குழுவை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்து கொண்டதாக குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க;- ஓபிஎஸ்-க்கு அன்று நல்ல நேரம்... இல்லனா வேற மாதிரி போயிருக்கும்.. ஆதங்கம் படும் டிடிவி. தினகரன்..!

Edappadi Palaniswami will be kicked out like Rajapaksa... TTV.Dhinakaran

அதிமுக தற்போது வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.  இந்த தீயவர்களோடு பயணிக்க கூடாது என்பதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அம்மாவின் உண்மையான தொண்டர்கள் உருவாக்கியுள்ளோம்.  பொதுக்குழு உறுப்பினர்களை யார் வேண்டுமானாலும் வசப்படுத்திவிடலாம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்துவிட முடியும். 

இதையும் படிங்க;- இணை ஒருங்கிணைப்பாளர் கே.சி. பழனிச்சாமி, அவைத் தலைவர் அன்வர் ராஜா.? பாயத் தயாராகும் ஓபிஎஸ் முகாம்!

Edappadi Palaniswami will be kicked out like Rajapaksa... TTV.Dhinakaran

ராஜபக்சே குடும்பத்தினர் எப்படி இலங்கையை விட்டு ஓடினார்கலோ, அமடமாவின் இயக்கத்தை விட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் விரட்டி அடிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம். அதனை நானும் தெரியப்படுத்தியுள்ளேன் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios