ஓபிஎஸ்-க்கு அன்று நல்ல நேரம்... இல்லனா வேற மாதிரி போயிருக்கும்.. ஆதங்கம் படும் டிடிவி. தினகரன்..!
தமிழக மக்கள் அனைவரும் முகம் சுழிக்கும் வகையில் அதிமுக பொது குழுவில் எந்த நிகழ்வும் இந்த முறை போல் வரலாற்றில் நடந்தது இல்லை. அதிமுகவின் பொதுக்குழுவை பார்த்த போது அம்மாவின் தொண்டனாக, அந்த இயக்கத்தில் பொருளாளராக இருந்தவன் என்ற முறையில் நான் வருத்தப்பட்டேன்.
அதிமுக பொதுக்குழுவை பார்த்த போது நான் வருத்தப்பட்டேன். தவறானவர்கள் கையில் இந்த இயக்கம் மாட்டிக் கொண்டது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் சென்னை அயப்பாக்கம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பங்கேற்றார். அப்போது, நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர்;- தமிழக மக்கள் அனைவரும் முகம் சுழிக்கும் வகையில் அதிமுக பொது குழுவில் எந்த நிகழ்வும் இந்த முறை போல் வரலாற்றில் நடந்தது இல்லை. அதிமுகவின் பொதுக்குழுவை பார்த்த போது அம்மாவின் தொண்டனாக, அந்த இயக்கத்தில் பொருளாளராக இருந்தவன் என்ற முறையில் நான் வருத்தப்பட்டேன்.
இதையும் படிங்க;- பொதுக்குழுவில் நடந்த அநாகரிக செயல்.. டிவி பார்த்த படியே மாரடைப்பால் உயிரிழந்த நிர்வாகி.. அதிர்ச்சியில் OPS
பன்னீர்செல்வத்தை பாராட்டுகிறேன். நீதிபதி வடிவில் இந்த துரோகிகள் கனவில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்கள். அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவருக்கும் 4 கோடி கொடுக்கப்பட்டது. அதிமுகவை மீட்டெடுக்கப்போவது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான். பணம் கொடுத்து பதவிக்கு வர அசுரன் போல ஒருவர் செயல்படுகிறார். ஓ.பன்னீர் செல்வத்திற்கு அன்று நல்ல நேரமாக இருந்தது. அதனால் வாட்டர் பாட்டிலால் அடித்தனர். இல்லையென்றால் வேறு எதனாலெல்லாம் அடித்திருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.
இதையும் படிங்க;- சட்டவிரோத பொதுக்குழுவை கூட்ட இபிஎஸ் முயற்சி.. விடாமல் செக் வைக்கும் ஓபிஎஸ்.. தேர்தல் ஆணையத்தில் அதிரடியாக மனு!
அந்த அயோக்கியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியதே பெரிய விஷயம் தான். தவறானவர்கள் கையில் இந்த இயக்கம் மாட்டிக் கொண்டுள்ளது. ஓபிஎஸ் ஒரு கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அவரை எங்கள் கட்சிக்கு வருவார் என்று கேட்பது சரியல்ல. அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் அங்கு கோடிக்கணக்கில் புரளுகிறது என டிடிவி. தினகரன் கூறினார்.
இதையும் படிங்க;- உட்கட்சி விவகாரத்தில் தலையிடாதீர்கள்.. ஐகோர்ட்டுக்கே அட்வைஸ் செய்யும் சி.வி. சண்முகம்..!